பிறை – அனைத்து மலேசியர்களையும் ஒன்றிணைத்து, அனைத்து இனங்களையும் மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய ஒரு அரசியல் கூட்டணி நாட்டில் அமைக்கப்பட வேண்டும் என்று பினாங்கு முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறுகிறார்.
பினாங்கு மாநில பக்காத்தான் ஹராப்பான் (PH) தலைவருமான சாவ், இந்நாட்டில் இணக்கமான சமூகத்தை உருவாக்க இது அவசியம், என்றார்.
“பக்காத்தான் ஹராப்பான் என்பது அனைத்து இனங்களையும் மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அரசியல் கூட்டணியாக அமையக்கூடும்.
“சில இனங்கள் மற்றும் மதங்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கூட்டணியை அமைக்கக் கூடாது. ஏனெனில், முன்னதாக கூட்டரசு அரசாங்கத்தை வழிநடத்திய தேசிய முன்னணி மற்றும் தேசிய கூட்டணி நிர்வாகத்தின் கீழ் மக்களிடையே பிளவு ஏற்பட்டதோடு நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்க நேரிட்டது.
“பினாங்கில் பக்கத்தான் ஹராப்பான் தலைமையிலான அரசாங்கம் இனம் மற்றும் மதத்தைப் பொருட்படுத்தாமல் மக்களை ஒன்றிணைப்பதில் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது.
“இதுவே, மக்களுக்கான அரசியல் கூட்டணி என்பதால் பொது மக்கள் வாக்களிக்க முன் வர வேண்டும்.
“எனவே, வருகின்ற நவம்பர்,19 ஆம் தேதி, இந்நாட்டை வழிநடத்த அதிகாரம் வழங்க
பக்காதான் ஹராப்பானுக்கு மக்கள் வாக்களித்து சரியான தேர்வு செய்ய வேண்டும்,” என்று அரசு சாரா இயக்கமான மலேசிய தமிழர் குரல் ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் சாவ் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்ச்சியில், இரண்டாம் துணை முதல்வர் மற்றும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமி, மாநில உள்ளாட்சி, வீட்டுவசதி, கிராமம் மற்றும் நகர்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ மற்றும் மலேசிய தமிழர் குரல் தலைவர் டேவிட் மார்ஷல் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பினாங்கை வழிநடத்தும் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியானது மக்கள் நலன் பராமரிக்கும் சிறந்த நிர்வாகத்திற்கான எடுத்துக்காட்டாகும்.
“இதனை பினாங்கில் 15 ஆண்டுகால நிர்வாக அடிப்படையில் பல சாதனைகள் படைத்து நிரூபித்துள்ளோம்.
“இது மாநில அரசாங்கத்தால் மக்களுக்கும் மாநிலத்திற்கும் பயனளிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு கொள்கைகள் மற்றும் திட்டங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளன.
“நாங்கள் வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஓர் அரசியல் கூட்டணியாகும்.