அன்னையர் சேவை போற்றி அங்கீகரிக்க வேண்டும் – கஸ்தூரி

Admin

 

புக்கிட் தம்புன்- ” பிள்ளைகளை சிறந்த முறையில் வளர்த்து அவர்களுக்காக சம்பளம் இல்லாத பணிப்பெண்ணாக உழைத்து பல தியாகங்கள் செய்யும் உன்னதமான தாயின் அன்பைப் போற்ற வேண்டும். தாயின் பாசத்திற்கு மதிப்பளித்து அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது,” என பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினரான கஸ்தூரி ராணி பட்டு இவ்வாறு கூறினார்.

“ஒரு தாய் பிள்ளைகளுக்கு வழிகாட்டியாகவும் தனித்து வாழும் தாய்மார்கள் தந்தையாகவும் அவர்களை அல்லும் பகலும் உழைத்து வளர்க்கின்றனர்,” என்று அன்னையர் தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பின் இவ்வாறு தெரிவித்தார்.

அன்னையர் தினத்தை முன்னிட்டு பத்து காவான் நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்த ஆறு இடங்களுக்குச் சென்று அன்னையர்களுக்கு வாழ்த்துக் கூறி பூங்கொத்து வழங்கினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு நேரடியாகச் சென்று ஏறக்குறைய 2,400 பூங்கொத்துகளைப் பொது மக்களுக்கு வழங்கினார். பொது மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். அதுமட்டுமின்றி, தனது வாழ்நாட்களிலே முதல் முறையாக பூங்கொத்து பெற்றுக் கொண்டர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர்.