பினாங்கின் இந்திய சங்கம் (ஐ.ஏ) மாநிலத்தில் உள்ள இந்திய சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை ஏற்பாடு செய்வதில் உறுதி பூண்டுள்ளது.
அதன் தலைவர் டாக்டர் கலைக்குமார் கூறுகையில், இச்சங்கம் இந்திய சமூக மேம்பாட்டுக்கு பல ஆண்டுகளாக கல்வி, கலாச்சாரம், கலை, விளையாட்டு மற்றும் சுகாதாரம் தொடர்பான பல்வேறு சமூக திட்டங்களை ஏற்று நடத்தி வருகிறது.
“இந்திய சமூகம் மற்றும் இளைய தலைமுறையின் மேம்பாட்டுக்கான இவை அனைத்தும் செயல்படுத்தப்படுகிறது.
“மேலும், இந்த ஆண்டிற்கும் இதுபோன்ற திட்டங்கள் தொடர்ந்து ஏற்று நடத்துவோம்,” என்று டாக்டர் கலைக்குமார் இன்று மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் அலுவலகத்திற்கு மரியாதை நிமித்தம் வருகை மேற்கொண்ட போது இவ்வாறு கூறினார்.
இதனிடையே, மாநில அரசின்
தொடர்ச்சியான ஆதரவைப் பெற குறிப்பாக நிதி உதவி கிடைக்கப்பெறும் என இச்சங்கம் நம்பிக்கை கொள்வதாக டாக்டர் கலைகுமார் கூறினார்.
” இம்மாநிலத்தில் உள்ள இந்திய சமூகத்தின் நல்வாழ்வை நன்கு மேம்படுத்துவதை இது உறுத்ஜி செய்யும்,” என்று அவர் மேலும் சூளுரைத்தார்.
சமூகத்திற்கு நல்ல நன்மைகளை தரக்கூடிய எந்தவொரு சங்கம் அல்லது அமைப்புக்கும் மாநில அரசு எப்போதும் ஆதரவளிப்பதாக மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் கூறினார்.
“பினாங்கு மாநில இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பினாங்கு இந்திய சங்கம் அதன் சேவையைத் தொடரும் என்று நான் நம்பிக்கை கொள்வதாக,” சாவ் கூறினார்.
இச்சங்கத்தின் கௌரவ செயலாளர் சண்முகசுந்தரம் வி.ராமசாமி மற்றும் பிற உறுப்பினர்களுடன் டாக்டர் கலைக்குமார் இச்சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த சந்திப்புக் கூட்டத்தில் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமியும் கலந்து கொண்டார்.