கடந்த 19/4/2015-ஆம் நாள் இந்திய உயர் ஆணையம் (Indian High
Commission) மற்றும் பினாங்கு மாநில அரசு இணை ஏற்பாட்டில் “இந்திய டிஜிட்டல் எழுச்சி” எனும் தகவல் தொழில்நுட்ப மற்றும் விண்வெளி பல்லூடக கண்காட்சியை மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார். இந்தக் கண்காட்சி இந்திய தேசிய அறிவியல் அருங்காட்சியகம் இணை ஏற்பாட்டில் பினாங்கு மாநிலத்தில் இனிதே நடைபெற்றது. பினாங்கு மாநிலத்தில் நடைபெறும் இந்திய விழா 2015 கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இக்கண்காட்சி திகழ்கிறது.
கடந்த 15/3/2015-ஆம் நாள் இந்திய விழா 2015 மற்றும் “இந்திய டிஜிட்டல் எழுச்சி” கண்காட்சியை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்து அகம் மகிழ்வதாகக் கூறினார் மாநில முதல்வர். இந்நிகழ்வுகளின் மூலம் இந்திய நாகரீகம் மற்றும் கலாச்சாரம் ஒன்றிணைந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டார் மாநில முதல்வர்.
காலணித்துவ ஆட்சியின் கீழ் வளரும் விவசாய நாடாக விளங்கிய இந்தியா இன்று நவீன நாடாக குறிப்பாகத் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் பீடுநடை போடும் நாடாகத் திகழ்வதை இக்கண்காட்சிக் குறிப்பிடுகிறது என்றார் மாநில முதல்வர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாகச் இந்திய நாட்டு செயற்கைக்கோள் சென்றடைந்ததைத் தொடர்ந்து அந்நாட்டின் புகழ் பாரில் போற்றப்படுவதாகக் குறிப்பிட்டார். கலாச்சார மற்றும் அறிவியல் பரிமாற்றங்கள் இந்தியா மற்றும் பினாங்கு மக்கள் இடையே உள்ள உறவை வலுப்படுத்தும்.
document.currentScript.parentNode.insertBefore(s, document.currentScript);