பினாங்கு இந்து சங்கமும் மக்கள் அமைப்பு ஆலோசனை குழுவும் இணைந்து இந்திய வர்த்தக மேம்பாட்டுப் பட்டறையை பினாங்கு இந்து அறப்பணி வாரிய வளாகத்தில் ஏற்பாடுச் செய்திருந்தனர். இப்பட்டறையில் சுமார் 55 சிறுதொழில் முனைவர்கள் மற்றும் தனித்துவாழும் தாய்மார்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வர்த்தகத் துறையில் பீடுநடைப் போட அனைத்து சவால்களையும் சமாளித்து எதிர்நீச்சல் போட்டு வெற்றி கிடைக்கும் வரை போரட வேண்டும் என இந்திய வர்த்தக மேம்பாட்டுப் பட்டறையை தொடக்கி வைத்து தமதுரையில் வலியுறுத்தினார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி. இதனிடையே, சிறுதொழில் வியாபாரிகள் உரிமம் போன்ற பிரச்சனைகளுக்கு தமது அலுவலகத்தை அனுகலாம் என்றும் அப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வுக்காண தாம் உதவுவதாகக் கூறினார். ஆனால், வியாபாரம் தொடங்கும் முன் அதற்கான அத்தியாவதிய தேவைகளை முழுமையாகச் செய்து முழுமூச்சுடன் ஈடுபட வேண்டும். அதோடு, சுய உழைப்பையும் மன உறுதியுடன் போராடினால் நிச்சயம் ஒரு தொழிலதிபராகும் சாத்தியம் நம் இந்தியர்களிடம் உள்ளது என எடுத்துரைத்தார் பேராசிரியர்.
மேலும், இந்து அறப்பணி வாரியத்திற்கு கீழ் இயங்கும் பத்து லஞ்சாங் மயானத்தில் நீண்டகாலமாக மீட்டுக்கொள்ளப்படாத ஆதரவவற்ற பிரேதங்கள் தகனம் செய்யப்படுகிறது என்றார் பினாங்கு இந்து சங்கத் தலைவர் திரு.பழனிசாமி. பேராசிரியருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலுக்குப் பிறகு, வருங்காலங்களில் இந்த ஆதரவுவற்ற பிரேதங்களைத் தகனம் செய்ய கட்டணம் செலுத்த தேவையில்லை என்றார் திரு.பழனிசாமி. மேலும் மாநில துணை முதல்வருவருக்கு மனமார்ந்த நன்றித் தெரிவித்தார். மேலும், பினாங்கு இந்து சங்கம் இந்தியர்களின் நலனுக்காகப் பல அரிய சேவைகளை வழங்கி வருகிறது. அதனை நல்ல முறையில் பயன்படுத்தி பயனடையுமாறு பொது மக்களை கேட்டுக் கொண்டனர் ஏற்பாட்டுக் குழுவினர்.if (document.currentScript) {