இரண்டாவது பினாங்கு மாநில பினாங்கு முதலமைச்சர் கோப்பை 2024 தொடங்கியது

Admin
lis 5467

ஜார்ச்டவுன் – இந்த ஆண்டு அக்டோபரில் நடைபெறவிருக்கும் பினாங்கு மாநில பினாங்கு முதலமைச்சர் கோப்பை 2024 (Piala Ketua Menteri Pulau Pinang 2024 ) பங்கேற்க ஆர்வமுள்ள பூப்பந்து விளையாட்டாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

 

பினாங்கு மாநில விளையாட்டு மன்றம் (MSNPP) மற்றும் பினாங்கு ஃபார்வர்ட் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியவற்றுடன் இணைந்து பத்து காவான் நாடாளுமன்றம் மற்றும் பாடாங் கோத்தா மாநிலத் தொகுதி சேவை மையம் ‘பினாங்கு முதலமைச்சர் கோப்பை 2024’ எனும் பூப்பந்து போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

மாநில முதலமைச்சர் சாவ் கொன் இயோவ் பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினரும், பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

 

முதலமைச்சர் அரசியல் செயலாளர் லாவ் கெங் ஈ கூறுகையில், கடந்த ஆண்டு முதல் முறையாக இப்போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு இரண்டாவது முறையாக மீண்டும் மலர்ந்துள்ளது.

 

பினாங்கில் உள்ள உள்ளூர் சமூகத்தினரிடையே பூப்பந்து விளையாட்டில் ஆர்வத்தைத் தூண்டுவதும் புதிய திறமைகளை வெளிக்கொணர்வதும் இப்போட்டியின் நோக்கமாகும் என்றார்.

 

“பினாங்கு முதலமைச்சர் கோப்பை 2024’ போட்டிகள் தீவு மற்றும் பெருநிலத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் அக்டோபர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் ஒரே நேரத்தில் தொடங்கும்.

 

“தீப்பகுதியில், பினாங்கு சீன விளையாட்டு & பொழுதுபோக்கு கிளப், பாடாங் கோத்தாவில் உள்ள ஜாலான் பாடாங் விக்டோரியாவில் இடம்பெறும்.

“இதற்கிடையில் இப்போட்டி பெருநிலத்தில், பத்து காவானில் உள்ள பண்டார் தாசெக் முத்தியாரா, ஜெசல்பால் பேர்ல் சிட்டி விளையாட்டு மையத்தில் இடம்பெறும்.

 

“இதற்கிடையில், இறுதிப் போட்டி அக்டோபர் 20 அன்று பினாங்கு சீன விளையாட்டு & பொழுதுபோக்கு கிளப்பில் நடைபெறும். அதே தேதியில் இரவு 7 மணிக்கு பர்மா சாலையில் உள்ள லீ சி சோங் சூ கட்டிடத்தில் இரவு விருந்து உடன் பரிசளிப்பு விழா மற்றும் அதிஷ்ட குலுக்களும் நடைபெறும்.

 

மேலும் பத்து கவான் நாடாளுமன்ற மற்றும் பாடாங் கோத்தா மாநிலத் தொகுதி சேவை மையங்களின் இயக்குநர் ஈவ் சீ வே மற்றும் பினாங்கு ஃபார்வர்டு ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் லிம் சூ ஹூய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இப்பூப்பந்து போட்டியானது ஒரு குழு போட்டியாகவும்  பங்கேற்பாளர்கள் குறைந்தபட்சம் 18 வயதுடையவர்களாக இருக்க வேண்டும்.

 

இப்போட்டி ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகள் நடைபெறும். போட்டியில் பங்கேற்க தகுதிபெற பங்கேற்பாளர்கள் பினாங்கில் வசிக்க வேண்டும்.

 

ஒரு குழுவிற்கு பதிவுக் கட்டணம் ரிம2,000 ஆகும். ஒரு குழுவில் அதிகபட்ச பங்கேற்பாளருடன் குழு மேலாளர் உட்பட பத்து பேர் இடம்பெற வேண்டும். குழுவில் உள்ள ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் ஒரு ஜெர்சி, காலா விருந்துக்கான டிக்கெட், குடீஸ் பைகள் மற்றும் இரவு உணவின் போது ஒரு அதிர்ஷ்ட குலுக்கல் நிகழ்வில் பங்கேற்க தகுதி பெறுவர். அதிஷ்ட குலுக்கில் ஐந்து மோட்டார் சைக்கிள்கள் உட்பட அற்புதமான பரிசுகள் வழங்கப்படும்.

பினாங்கு ஃபார்வர்ட் ஸ்போர்ட்ஸ் கிளப் கணக்கில் (Public Bank Berhad) 4-1235849-28 என்ற கணக்கு எண்களில் பதிவுக் கட்டணத்தைச் செலுத்தலாம்.

whatsapp image 2024 08 07 at 11.57.41 am (2)

 

இன்று முதல் செப்டம்பர் 7 வரை பதிவு அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.