இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சில முக்கிய தீர்மானங்களை வெளிக்கொணர பினாங்கு தமிழர் முன்னேற்ற கழகம் கடந்த 21 நவம்பர் 2015-ஆம் நாள் ஜென் தங்கும்விடுதியில் இலங்கை மனித உரிமை மீறல் எதிரான அனைத்துலக மாநாட்டை (Penang International Forum on Human Rights Violations in Sri Lanka) சிறப்பாக நடத்தியது. கடந்த பல ஆண்டுகளாக இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இமைக்கப்பட்ட கொடுமையின் பிரதிபலிப்பு மரணங்கள், பாலியல் வன்முறைகள், நிலங்கள் மற்றும் உரிமைகள் பறிப்பு என அங்கு வாழும் தமிர்கள் கொன்று குவிக்கப்பட்ட இடமாக இலங்கை நாடு விளங்குவதால் அங்கு அனைத்துலக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கடந்த செப்டம்பர் 16-ஆம் திகதி அன்று, ஐக்கிய நாட்டு சபை (ஐ.நா) மனித உரிமைக் கழகம் இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பான 260 பக்கள் கொண்ட ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது. இந்த ஆய்வறிக்கையை முன்வைத்தே இம்மாநாடு நடத்தப்பட்டதாக தமது சிறப்புரையில் கூறினார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி.
இந்நிகழ்வில் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், கருத்தரங்கில் தமிழ்நாட்டை சேர்ந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் வைகோ, இலங்கை மட்டுமின்றி மலேசியாவிலும் தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டும் நோக்கில் உள்ளூர் முக்கிய அரசியல் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் ஆதரவுகளை நல்கினர்.
இதனிடையே, இந்நிகழ்வினை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்து சிறப்புரை வழங்கிய மாநில முதல்வர் அவர்கள் நம்முடைய கண் முன்னே நிகழும் மனித உரிமை மீறல்களை இன பேதம் பார்க்காமல் உலகமே அதனை எதிர்க்க வேண்டும் என்றார். இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை தொடர்பாக அனைத்துலக ரீதியான விசாரணை செய்யப்பட வேண்டும் என்றும் அதற்காக மக்கள் ஒன்றாகச் சேர்ந்து குரல் எழுப்ப வேண்டும். இம்மாதிரியான விசாரணைக்கு ஆதரவளிப்பதன் மூலம் நியாயமும் உண்மையும் நிலைநாட்டப்படுவது திண்ணம் எனக் கூறினார் மாநில முதல்வர்.
இலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்ட இன தீவிரவாத மனித உரிமை மீறல்கள் குறித்த அனைத்துலக பினாங்கு கருத்தரங்கத்தின் இறுதியில் தமிழக மதிமுக பொதுச் செயலாளர் வாசித்து 5 தீர்மானங்களை நிறைவேற்றினார். ஐந்து தீர்மானங்கள் பின்வருமாறு:-
(1) இலங்கை தீவின் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளை, ஐக்கிய நாடுகள் சபை வழிகாட்டலில் நடத்தப்படும் பொதுமக்கள் வாக்கெடுப்பின் வழி அனைத்துலக சமூகம் அங்கீகரிக்க வேண்டும், இலங்கையின் வடக்கு, கிழக்கில் வாழும் ஈழத்தமிழ் அகதிகள் புலம் பெயர் தமிழர்கள் ஆகியோர் வாக்கெடுப்பில் அனுமதிக்கப்பட வேண்டும்,
(2) இலங்கையில் நடந்த தமிழ் இனவழிப்பு நடவடிக்கைகள் குறித்த, சுயேச்சையான அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும்,
(3) இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலத்திலிருந்து இலங்கை இராணுவப் படைகள், சிங்கள நில ஆக்கிரமிப்பாளர்களை இலங்கை அரசு உடனடியாக மீட்டுக்கொள்ள வேண்டும்.
(4) தீவிரவாத நடப்பு சட்டம், பல்வேறு பாதுகாப்பு சட்டங்கள் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக நிபந்தனைகள் இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும்,
(5) “இலங்கையில் நடந்தது தமிழர்களுக்கெதிரான இனவழிப்பு நடவடிக்கைதான்” என பினாங்கு மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என பினாங்கு மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
இந்த அறிக்கை வாசித்த போது அரங்கமே ஆதரவு அளிக்கும் வகையில் கைத்தட்டி வரவேற்று தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகளுக்கு பதில் கூற வேண்டும் என்றார்.d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);