ஶ்ரீ டெலிமா தொகுதியின் ஏற்பாட்டில் யூ.பி.எஸ்.ஆர் மற்றும் எஸ்.பி.எம் அரசு தேர்வுகளில் அமரவிருக்கும் மாணவர்களுக்கு இலவச பிரத்தியேக வகுப்பு அதிகாரப்பூர்வமாகத் திறப்பு விழாக்கண்டது. இந்நிகழ்வினை இனிதே துவக்கி வைத்தார் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ராம் கர்பால் மற்றும் ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் திரு.நேதாஜி இராயர்.
இத்திட்டம் முன்னால் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினரான காலஞ்சென்ற கர்பால் சிங் சிந்தனையின் அடிப்படையில் இந்த இலவச பிரத்தியேக வகுப்பு திட்டம் பிரத்தியேகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமது சிறப்புரையில் தெரிவித்தார் ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் திரு.நேதாஜி ராயர். ஆங்கிலம், அறிவியல் மற்றும் கணிதம் என மூன்று பாடங்கள் முதன்மையாக இப்பிரத்தியேக வகுப்பில் கற்றுத் தரப்படும். இச்சிறப்பு திட்டத்திற்காக ரிம55,000-ஐ மாநில அரசு வழங்கியுள்ளது. இதில், இலவச பாடநூல், பயிற்சி புத்தகம், ஆசிரியர்கள் ஊதியம் மற்றும் நூல்நிலையம் அமைத்தல் போன்றவைகள் அடங்கும் என மேலும் விவரித்தார் .
இதுவரை இந்த இலவச பிரத்தியேக வகுப்பிற்கு 20 யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களும், 12 எஸ்.பி.எம் மாணவர்களும் பதிந்துள்ளனர். வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவும் நோக்கத்திலும் தற்போது மோசமான நிதி சுமைக்குத் தள்ளப்பட்டிருக்கும் பெற்றோர்களுக்கு உதவும் எண்ணத்தில் இத்திட்டம் மலர்ந்துள்ளதாக தமது வரவேற்புரையில் சுட்டிக்காட்டினார் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ராம் கர்பால் . கல்வி கற்க தடைகளைக் காரணம் காட்டாமல், கிடைக்கும் வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்தி எதிர்காலத்தை நம்வசமாக்கி கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதன் வழி சிறந்த எதிர்காலத்தை அமைத்து கொள்ள முடியும் என்பது வெள்ளிடைமலை. மேலும், திரு.நேதாஜி இராயரின் இப்புதிய முயற்சியைப் பாராட்டினார்.d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);