உடல் ஊன்முற்றோர் தொழில்முனைப்பு கண்காட்சி

உடல் ஊன்முற்றோர் தொழில்முனைப்பு கண்காட்சி அமைப்பாளர்களுக்கு சான்றிதழ் எடுத்து வழங்கினார்

அண்மையில் பினாங்கு ஸ்பைஸ் அரங்கில் பினாங்கு உடல் ஊனமுற்றோர் தொழில்முனைப்பு கண்காட்சி 201நநடைபெற்றது. இந்நிகழ்வில் பிரத்தியேகமாக 6 கூடாரங்கள் உடல் ஊனமுற்றோர் பயனடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன என இந்நிகழ்வினை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்த இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தெரிவித்தார்.

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் முதலாளிகள் உடல் ஊனமுற்றோரை சுமையாக கருதாமல் அவர்களுக்கும் மதிப்பளித்து வேலை வாய்ப்புகள் வழங்க முனைப்பு காட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதோடு, உடல் ஊனமுற்றோரிடமும் பல திறமையும் ஆற்றலும் ஒளிந்திருப்பதை உணர வேண்டும் எனவும் சூளுரைத்தார். இவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்குவதன் வழி அவர்களும் வாழ்க்கையில் வெற்றிநடை போட முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

கண்காட்சியில் கலந்து கொண்டவர்கள்

பினாங்கு மாநில அரசு உடல் ஊனமுற்றோருக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. பினாங்கு நூல்நிலையத்திலும் கொம்தார் அரசு அலுவலகங்களிலும் உடல்பேறு குறைந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியது தக்க சான்றாகும் திகழ்கிறது. எனவே, உடல் ஊன்முற்றோர் தொழில்முனைப்பு கண்காட்சியில் பலர் கலந்து கொண்டு பயனடைவர் என நம்பப்படுகிறது. இந்நிகழ்வில் பினாங்கு மாநகர் கழக உறுப்பினர் திரு.குமரேசன், பினாங்கு காது கேளாதோர் சங்க செயலாளர் தே கியான் ஹோ கண்காட்சி ஒருங்கிணைப்பு தலைவர் பிரான்சிஸ் ஓங் ஆகியோர் கலந்து கொண்டனர்.