புக்கிட் மெர்தாஜாம் – நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு பொது மக்களிடையே நல்லிணக்கத்தையும் இன ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்துகிறது.
இந்நாட்டில் குறிப்பாக பினாங்கு மாநிலத்தின் பல்லின மக்களிடையே ஒற்றுமையை மேம்படுத்துவதற்கு காலங்காலமாகப் பின்பற்றி வரும் பழக்க வழக்கங்களைத் தொடர்ந்து பேணவும் திறந்த இல்ல உபசரிப்பு சிறந்த சான்றாக அமைகிறது.
செபராங் பிறை மாநாகர் கழகம் (MBSP) ஏற்பாட்டில் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு மிகவும் சிறப்பாகவும்
வண்ணமயமாகவும் நடைபெற்றது.
இந்தக் கொண்டாட்டத்தில் பாரம்பரியத்தை போற்றும் வகையில் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டன.
எம்.பி.எஸ்.பி மேயர் டத்தோ அசார் அர்ஷாத் ஏற்பாட்டில் நடந்த நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் பல இன மக்கள் இன மதப் பேதமின்றி கலந்து கொண்ட தருணம் தமக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
இந்தக் கொண்டாட்டத்தில் ஆடல் பாடல் என கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மேலும், மாநகரச் செயலளர் பத்ருல் அமீன் அப்துல் ஹமீது, எம்.பி.எஸ்.பி துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
பல்வேறு துறைகளில் இருந்து அழைக்கப்பட்ட விருந்தினர்கள் மற்றும் எம்.பி.எஸ்.பி கவுன்சில் உறுப்பினர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் அனைத்து எம்.பி.எஸ்.பி பணியாளர்கள் ஆகியோரின் வருகை இக்கொண்டாட்டத்தை மேலும் மெருகூட்டியது.
கேதுபட், ரெண்டாங் மற்றும் லக்சா தவிர, ஆடு கோலேக், அப்பம் பாலிக் மற்றும் பழ ரோஜாக் மற்றும் இன்னும் பல உணவு பதார்த்தங்கள் பரிமாறப்பட்டது.