ஜார்ச்டவுன் – இந்த ஆண்டின் முதல் பாதியில் நமது பொருளாதாரம் 6.9% ஆக வலுவாக வளர்ச்சியடைந்தது, எனவே,overnight policy rate (OPR)-ஐ மீண்டும் அதிகரித்துள்ளதை அண்மையில் நிதி அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ சப்ருல் அப்துல் அஜிஸ் அறிவித்தார்.
தற்போது பலவீனமான உலகப் பொருளாதாரம் மற்றும் வலுவான அமெரிக்க டாலர் மதிப்பு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 5.3% முதல் 6.3% வரை மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) வளர்ச்சி மதிப்பீடுகளை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது, என்றார்.
பொருளாதார வளர்ச்சி இரண்டாவது காலாண்டில் (2Q) ஜி.டி.பி 8.9% வளர்ச்சியுடன் வலுவாக உள்ளது. இந்த வலுவான வளர்ச்சி இந்த ஆண்டின் 3 காலாண்டிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தனியார் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் தொடர்பாக, முத்துச் செய்திகள் நாளிதழ் நிருபர்கள் மக்களின் கருத்துகளைப் பெற முற்பட்டனர்.
காப்புறுதி முகவராக பணிப்புரியும் கி.பைரவி, 34 2022ல் இந்த வட்டி விகித உயர்வு நாடு மற்றும் தனிநபர்களின் நிதி நிலைமைக்கு சாதகமாகவும் பாதகமாகவும் இருக்கும் என்று கூறினார்.
“வட்டி விகிதத்தின் அதிகரிப்பு பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்துகிறது மற்றும் செலவு விகிதத்தை குறைக்கிறது, இதனால் பொருட்கள் அல்லது சொத்துடைமைகளின் விலை ஒரு முறை குறைக்கப்படலாம். ஆனால், நடுத்தர வருமானம் கொண்ட தரப்பினர் மிகவும் கடுமையான நிதிச் சிக்கல்களை எதிர்கொள்வார்.
“ACA அதிகரிக்கப்பட்டால், வீடுகள், கார்கள் மற்றும் பிறவற்றின் மாதாந்திர கட்டணங்களும் தொடர்ந்து அதிகரித்து மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவினங்களைப் பாதிக்கும். இந்த அதிகரிப்பு பணவீக்கத்தைக் குறைப்பதன் மூலம் செலவினங்களை நிறுத்துவது மற்றும் மக்களின் கடனை அடைப்பதற்கும் சேமிப்பதற்கும் அதிக பணத்தை திசைத்திருப்பச் செய்தாலும், மக்கள் இன்னும் சுமையை எதிர்நோக்குவர்”, என பைரவி கருத்துரைத்தார்.
“அனைத்து வகையான கடன்களுக்கும் OPR அதிகரிப்பு, மக்களுக்கு ஒரு சுமையாகவே அதிகரித்துக் கொண்டே போகும். இதனால், அவர்கள் எப்படி பணம் செலுத்துவார்கள்; இந்நிலைமை மக்களுக்குக் கடன் சுமையில் ஆழ்த்தும்”, என மலாயன் வங்கியில் பணிப்புரியும் பவானி ராகவன், 50 தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மேலும், சேமிப்பு வட்டிக்கு வாடிக்கையாளர்கள் பயனடையலாம் ஆனால் 0.1% மட்டும் தான், இதைவிட அதிகம் இல்லை, என்றார்.
வங்கியில் பணிப்புரியும் கோணத்தில் பார்த்தால் OPR அதிகரிப்பு ஒட்டுமொத்தமாக வாடிக்கையாளர்களுக்குப் பாதகங்கள் அதிகம் விளைவிக்கும் என கருத்துரைத்தார்.
இதனிடையே, காந்திமதி, 35, அரசுத்துறையில் உதவி கணக்காளராக பணிப்புரியும் இவர் கடந்த செப்டம்பர் 2022 இல் மலேசிய தேசிய வங்கி 2.25% முதல் 2.50% வரை OPR அதிகரிப்பை அறிவித்தது. மேலும், ஜனவரி 2022 OPR மூன்றாவது அதிகரிப்பு ஆகும். இந்த அதிகரிப்பு கார்கள், வீடுகள், தனிநபர் கடன்கள் மற்றும் பிற கடன்களின் மாதாந்திர தவணைகளை அதிகரிக்கச் செய்து, அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கிறது.
” முன்னதாக, மலேசியர்கள் பொருட்களின் விலை அதிகரித்தாலும், குறைந்த OPR விகிதம் காரணமாக மலேசியர்கள் இன்னும் கூடுதலாகச் செலவு செய்ய முடிந்தது. ஓ.பி.ஆர் அதிகரிப்பு மக்களின் வாங்கும் சக்தியைப் பாதிக்கிறது.
“அரசு ஊழியர் என்ற முறையில், தனியார் ஊழியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியமான 1,500 ரிங்கிட் அரசு ஊழியர்களுக்கும் பரிசீலிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன். இதனால் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் குறைக்க முடியும்”, என காந்திமதி குறிப்பிட்டார்.