கம்போங் பாரு காளியம்மன் ஆலயத்தில்”அட்சய பாத்திரம்” திட்டம் அறிமுகம்

Admin
 "அட்சய பாத்திரம்" திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் வோங் ஹொன் வாய். (உடன் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் இந்து சங்க உறுப்பினர்கள்)
“அட்சய பாத்திரம்” திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் வோங் ஹொன் வாய். (உடன் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் இந்து சங்க உறுப்பினர்கள்)

சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு கம்போங் பாரு காளியம்மன் ஆலயம் மற்றும் இந்து சங்கம் இணைந்து “அக்சய பாத்திரம்” திட்டத்தை அறிமுகம் செய்தனர். இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் ஆயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் வோங் ஹொன் வாய்.
மேலும் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு 50 வசதிக் குறைந்த இந்தியர்களுக்குச் சட்டமன்ற உறுப்பினர் பரிசுக்கூடை வழங்கினார். சிறப்புப் பிரமுகராக வருகையளித்த சட்டமன்ற உறுப்பினர் வோங் ஹொன் வாய் அவர்களுக்கு பொன்னாடைப் போற்றி மாலை அணிவித்தார் ஆலயத் துணைத்தலைவர் திருபண்னீர்ச்செல்வம். நிகழ்வில் உரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் அனைத்து இந்தியர்களுக்கும் தமிழ் சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். “அட்சய பாத்திரம்” எனும் திட்டம் வரவேற்கதக்கதாகும் என்றார். இத்திட்டத்தின் மூலம் வசதி குறைந்த ஏழை மக்கள் நன்மை அடைவர் என்றார்.
இன்று முதல்(14/4/2016) ஆலய வளாகத்தில் கொள்கலன்கள் இடம்பெறுவதாகவும், அதில் பொது மக்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப அன்றாடத் தேவைக்கானப் பொருட்களை வைக்கலாம் என ஆலயத் துணைத்தலைவர் திரு பண்ணீர்ச்செல்வம் கூறினார். மாதத்திற்கு ஒரு முறை சேகரிக்கப்பட்டப் பொருட்கள் வசதிக் குறைந்த ஏழை மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். மக்களிடமிருந்து பெறப்படும் உதவி மக்களுக்கே மீண்டும் வழங்கப்படும் என்பதே இத்திட்டத்தின் தலையாய நோக்கமாகும்..

அல்ல அல்ல குறையாத அட்சய பாத்திரம் போல் இக்கொள்கலன் நிறைந்து பொது மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என ஆலய நிர்வாகத்தினர் எண்ணம் கொண்டுள்ளனர்.