“குடும்ப நல்லிணக்கம் அனைவரின் பங்கு”

படம் 1:பட்டறையில் கலந்து கொண்ட மகளிருடன் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் குமாரி கஸ்தூரி பட்டு
படம் 1:பட்டறையில் கலந்து கொண்ட மகளிருடன் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் குமாரி கஸ்தூரி பட்டு

அனைத்துலக ரீதியில் பெண்களுக்கு எதிரான வன்செயலை நிறுத்துவதற்கு பொதுமக்கள், அரசாங்கம், மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் ஒன்றிணைந்து பெண்களின் உரிமைக்காகவும் பாதுகாப்பாகவும் நவம்பர் மாதம் தொடங்கி மூன்று வாரத்திற்கு பிரச்சாரங்கள் நடத்தி வருகிறது. அவ்வகையில் பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகம், பெண்கள் மறுமலர்ச்சி நிலையம் மற்றும் இளைஞர் & விளையாட்டு, பெண்கள், குடும்பம், மற்றும் சமூக மேம்பாட்டு ஆட்சிக்குழு இணையாதரவுடன் “குடும்ப நல்லிணக்கம் அனைவரின் பங்கு” எனும் பட்டறை நடைபெற்றது. இந்த பட்டறை பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலினம் சார்ந்த வன்செயல்களைக் களையும் பொருட்டு நடத்தப்பட்டது.
இந்தப் பட்டறை “பினாங்கு கோஸ் ஆரஞ்சு” எனும் தொடர் பிரச்சாரத்தின் ஒரு அங்கமாகத் திகழ்கிறது. இந்தப் பட்டறை கடந்த 23/11/2014-ஆம் நாள் தென் செபெராங் பிறை மாவட்ட பொது மக்களுக்காகப் பிரத்தியேகமாகத் தமிழ்மொழியில் நடத்தப்பட்டது. இந்த நவீன காலக்கட்டத்திலும் குடும்ப வன்முறை அதிகரித்து வருவதை மலேசிய அரசு புள்ளி விபரம் குறிப்பாக 2013-ஆம் ஆண்டு பதிவாகியுள்ள 4,123 வழக்குகள் நன்கு சித்தரிக்கின்றது. எனவே, பொது மக்களிடையே பெண்களுக்கு எதிரான வன்முறையைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு இப்பட்டறை நடத்தப்பட்டது. இந்தப் பட்டறையின் நிறைவு உரை வழங்க பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய குமாரி கஸ்தூரி பட்டு கலந்து கொண்டார். பெண்கள் வன்முறையை எதிர்த்து போராட வேண்டும் என்றும் பெண்கள் தைரியமாக வாழ்வில் பீடுநடைப் போட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பெண்கள் வன்முறையை எதிர்த்து போராடினால் தங்கள் பிள்ளைகளுக்கும் இந்நிலை ஏற்படாமல் தவிக்கலாம். இந்தப் பட்டறையில் கலந்து கொண்டதன் வழி பெண்கள் வன்முறையை எதிர்த்து துணிந்து போராட வேண்டும் என்பதை அறிந்து கொண்டேன் என்றார் நிகழ்வில் கலந்து கொண்ட திருமதி அம்புஜம்.