குறைந்த விலை, குறைந்த நடுத்தர விலை வீடுகளுக்குப் புதிய விண்ணப்பப் பாரம் அறிமுகம்.

Admin

குறைந்த விலை, குறைந்த நடுத்தர விலை வீடுகள் பிரிவுகளுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு தொடர்புடைய முழு அமைப்பு மற்றும் செயலாக்கம் கடந்த 7 ஜூன் 2013  உருவாக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. பினாங்கு மாநிலத்தில் நடுத்தர மக்கள் தனக்கென்று ஒரு வீடு பெற்றிருப்பதை உறுதி செய்யும் பொருட்டு இத்திட்டம் அமலுக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக, இன்னொரு புதியத் திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் ஏழ்மையில் வாழும் மக்கள் வீடு வாங்குவதை உறுதிச் செய்யும் பொருட்டு புதிய விண்ணப்பப் பாரம் அறிமுகப்படுத்தினார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ அவர்கள்.

புதுப்பித்த விண்ணப்பப் பாரத்துடன் கிராமம்,நகரம் மற்றும் வீடமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினரும் டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப் சிங் டியோவும் மற்றும் பிற சட்டமன்ற உறுப்பினர்கள்
புதுப்பித்த விண்ணப்பப் பாரத்துடன் கிராமம்,நகரம் மற்றும் வீடமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினரும் டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப் சிங் டியோவும் மற்றும் பிற சட்டமன்ற உறுப்பினர்கள்

தேர்வு செயலாக்கம் மற்றும் மேம்பாடு சமூகத்தினர் நான்கு சந்திப்பு கூட்டத்திற்குப் பிறகு விண்ணப்பப் பாரத்தை மறுபரீசீலனைச் செய்துள்ளனர். இதில் வீட்டு விலைகள், அதன் பிரிவுகள், பினாங்கு வாழ் மக்கள் என பல பகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதனால், விண்ணப்பதாரர்களின் தகவல்கள் தெள்ளத் தெளிவாக இருக்கும் என விளக்கினார். இவ்விண்ணப்பப் பாரம் வரும் 14 டிசம்பர் 2013-லிருந்து அமலுக்கு வரும். இதனை கொம்தாரில் இருக்கும் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். அதோடு, இணையத்தின் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். இதற்கு முன்பு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.  இத்தகைய மலிவு வீடமைப்புக்கானப் பெறும் விண்ணப்பம் பினாங்கு வாழ் மக்களிடையே மிகுதியாகக் காணப்படும். மாநில அரசும் பினாங்கு மேம்பாட்டு குழுவினரும் இணைந்து பல மலிவு வீடமைப்புத் திட்டங்களை தொடங்கியது

எண் திட்டத்தின் பெயர்  யூனிட் விற்கும் விலை பணித்திட்டம் செயலாக்கம்
தீவு (ISLAND)
1 தெலோக் கும்பார்

TELUK KUMBAR

LMC (700sq ft)

AHS (850sq ft)

AHS (1000sq ft)

மொத்தம்:

696 யூனிட்கள்

ரிம 72,500.00

ரிம 212,000

ரிம 250,000

பிப்ரவரி 2014
2 ஜெலுத்தோங்

JELUTONG

LMC (700sq ft)

மொத்தம்:

556 யூனிட்கள்

ரிம 72,500.00

 

ஜூலை 2014
3 எஸ்பி செல்லையா

SP CHELLIAH

LMC (700sq ft)

AHS (800sq ft)

AHS (900sq ft)

AHS (1000sq ft)

SOHO (800sq ft)

மொத்தம்:

1,900 யூனிட்கள்

ரிம 72,500

ரிம 200,000

ரிம 300,000

ரிம 400,000

ரிம 200,000

ஜுன் 2014
மெயின்லேண்ட் (MAINLAND)
4 கம்போங் ஜாவா, பட்டவோத்

KAMPUNG JAWA, BUTTERWORTH

LMC (700sq ft)

AHS (850sq ft)

AHS (1,000sq ft)

மொத்தம்:

707 யூனிட்கள்

 

ரிம 72,500.00

ரிம 200,000

ரிம 250,000

பிப்ரவரி 2014
5 அம்பாங் ஜாஜார்

AMPANG JAJAR

LMC (700sq ft)

AHS (850sq ft)

AHS (1,000sq ft)

மொத்தம்:

1,634 யூனிட்கள்

 

ரிம 72,500.00

ரிம 200,000

ரிம 240,000

மார்ச் 2014

(மண்தோண்டும் வேலை)

ஜனவரி 2015
(பிரதான கட்டிடம் வேலை)

6 ஒவ் ஜாலான் பெரம்பிட்

OFF JALAN BERAPIT

LMC (700sq ft)

AHS (850sq ft)

AHS (1,000sq ft)

மொத்தம்:

1,000 யூனிட்கள்

 

ரிம 72,500.00

ரிம 200,000

ரிம 240,000

மார்ச் 2015

 

7 புக்கிட் ஜுரு

BUKIT JURU

LMC (700sq ft)

AHS (800sq ft)

AHS (1,000sq ft)

மொத்தம்:

800 யூனிட்கள்

 

ரிம 72,500.00

ரிம 200,000

ரிம 240,000

மார்ச் 2015

 

8 பண்டார் காசியா, பத்து காவான்

BANDAR CASSIA, BATU KAWAN
(PHASE 1)

LMC (800sq ft)

AHS (900sq ft)

AHS (1,000sq ft)

மொத்தம்:

11,800 யூனிட்கள்

 

ரிம 72,500.00

ரிம 200,000

ரிம 220,000

நவம்பர் 2013

 

மேலும் மலிவு வீடு யூனிட்கள் வழங்கும் பல தனியார் வீட்டுத் திட்டங்கள் உள்ளன. எனவே பொதுமக்கள் முன் வந்து வீடமைப்புத் துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கேட்டு கொண்டார் மதிப்பிற்குரிய ஜெக்டிப் டியோ அவர்கள். அதோடு, விண்ணப்பதாரர்களின் தகுதி நிலையையும் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என தெளிவுப்படுத்தினார். ஆட்சிக்குழு உறுப்பினரும் செபெராங் ஜெயா சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் அஃபீஃப் பஹார்டின், ஆட்சிக்குழு உறுப்பினர் பீ புன் போ, பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சிம் திஸ் திஸின், தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் எங் வேய் வென் ஆகியோர் கலந்து கொண்டனர்.