பினாங்கில் புகழ்ப்பெற்ற சுற்றுலாத்தலமான கொடி மலையில் பல அடுக்கு மாடிகளைக் கொண்ட வாகன நிறுத்துமிடம் நிறுவப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டிடத்தால் பல ஆண்டுகளாகப் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை எதிர்நோக்கி வந்த சுற்றுப்பயணிகள் மற்றும் அப்பகுதி குடிமக்களின் பிரச்சனைத் தீர்வுக்காணப்பட்டது. பல அடுக்கு மாடிகளைக் கொண்ட புதிய வாகன நிறுத்தும் இடத்தை அதிகாரப்பூர்வமாக மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பினாங்கு நகராண்மைக் கழக உறுப்பினர்கள் மற்றும் அரசு துறை தலைவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
பினாங்கு மேம்பாட்டுக் கழகம் ரிம11.49 மில்லியன் செலவில் இந்தப் புதியக் கட்டிடத்தை நிறுவி கொடி மலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உதவியது. இக்கட்டிடத்தில் கார்களுக்கு 306 இடங்களும் மோட்டார் சைக்கிள்களுக்கு 182 இடங்களும் மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கு 5 சிறப்பு இடங்களும் என ஒதுக்கீடுச் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் அமைக்கப்பட்ட வாகன நிறுத்துமிடத்தில் 96 வாகனங்கள் மட்டுமே நிறுத்த முடியும். எனவே, மாநில அரசு கடந்த 2012-ஆம் ஆண்டு அவ்விடத்தை இடித்து இன்று காணப்படும் பல அடுக்கு மாடி கட்டிடத்தை நிறுவியுள்ளது என்றார் மாநில முதல்வர்.
2013-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இக்கட்டிட நிர்மாணிப்புப் பணி நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்பட்ட வேளையில் அப்பகுதியில் பரந்த அளவிலான கற்பாறைகள் அப்புறப்படுத்தி நிர்மாணிப்புப் பணிகளைத் தொடங்க அதிக கால அவகாசம் தேவைப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தக் கட்டிட நிர்மாணைப்புப் பணி நிறைவடைந்த போதிலும் “certificate of completion and complience” எனும் அனுமதி சான்றிதழ் கிடைக்கப்பெற தாமதமாகியது என்றார் முதல்வர். பினாங்கு மாநிலத்திற்கு வருகைப்புரியும் சுற்றுப்பயணிகள் கொடி மலைக்குத் தவறாமல் வருகைபுரிகின்றனர் என்பதை கடந்த ஆண்டு வருகையளித்த சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை 1,364,074 சித்தரிக்கின்றது.if (document.currentScript) {