2015/2016 தவணைக்கான சமூக முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டுக் கழக உறுப்பினர்கள் பெருநிலப்பகுதிக்கான நியமனம் கெபாலா பத்தாஸ் மில்லேனியம் மண்டபத்திலும் தீவுப்பகுதிக்கான நியமனம் பாயான் லெபாஸ் கொம்லேக்ஸ் தாபோங் ஹஜி மண்டபத்திலும் இனிதே நடைபெற்றது.
நிகழ்வில் சிறப்புரையாற்றிய மாநில முதல்வர் அவர்கள் பினாங்கில் சமூக முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தோற்றம் பினாங்கு வாழ் மக்களுக்கு பாதுகாப்பும் சமூக சேவை செய்வதற்கும் மிகவும் துணைபுரிகிறது என வர்ணித்தார்.
2015/2016 தவணைக்கான சமூக முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டுக் கழக தலைவருக்கு மாதாந்திர ஊக்கத்தொகை ரிம650, செயலாளருக்கு ரிம550 ஆக வழங்கப்படுகிறது. சமூக முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டு உறுப்பினர்களுக்கு ரிம 30 இருந்து ரிம 40 ஆக உயர்ந்துள்ளது. சமூக முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டுக் கழகத்திற்காக மாநில அரசு ரிம 12,594,480.00-ஐ பினாங்கில் உள்ள 21 சமூக முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் பணிப்புரியும் 4350 உறுப்பினர்களுக்காக ஒதுக்கியுள்ளது. இக்கூடுதல் ஊக்கத்தொகை சமூக முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டுக் கழக உறுப்பினர்கள் புதிய உத்வேகத்துடன் தங்களின் சேவையை வழங்க நல்ல ஊக்கமாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார் மாநில முதல்வர் அவர்கள்.
மூன்றாவது முறையாக பிறை சமூக முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டுக் கழக தலைவராக நியமனம் செய்யப்பட்ட
திரு.ஶ்ரீ சங்கர் அவர்கள் பிறை வட்டாரத்தை ஒரு தூய்மையான பசுமையான நகரமாக மாற்றியமைப்பதை தமது தலையாய கடமையாகக் கொண்டுள்ளார். மேலும், செபராங் பிறை நகராண்மைக் கழகத்துடன் இணைந்து இவ்வாண்டுக்குள் 150 மரங்களை நட திட்டமிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். அனைத்து இன மக்களும் பங்கு பெற்று பயன்பெறும் வகையில் புதிய நிகழ்வுகளை இவ்வாண்டு தமது திட்டத்தில் உள்ளடக்கியுள்ளார். அதோடு, பினாங்கு மாநில அரசு மீண்டும் தமக்கு பிறை மக்களுக்கு சேவை வழங்கக் கொடுத்த வாய்ப்புக்குத் தமது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டார்.d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);