வருகின்ற சீனப் புத்தாண்டை முன்னிட்டு, ஜாவி சட்டமன்ற உறுப்பினர் சூன் லிம் சீ “Continental Automotive Components Malaysia Sdn. Bhd” எனும் நிறுவனத்துடன் இணைந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுனருக்கும் மிதிவண்டி ஓட்டுனருக்கும் பாதுகாப்பு கவச ஆடை அணிவித்தனர். நிபோங் திபாலில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் 1,000 வாகனமோட்டிகளுக்குப் பாதுகாப்பு கவச ஆடை வழங்கப்பட்டன.
கடந்த ஆண்டு தென் செபராங் பிறையில் மட்டுமே கார் பயன்படுத்தி 300 சாலை விபத்துகள் பதிவுச்செய்யப்பட்டுள்ளன. அதேவேளையில், மோட்டார் சைக்கிள் பயன்படுத்தி 150 சாலை விபத்துகள், மற்றும் கனரக வாகனம் பயன்படுத்தி 50-க்கும் குறைவான சாலை விபத்துகள் பதிவுச்செய்யப்பட்டுள்ளன என விவரித்தார் ஜாவி சட்டமன்ற உறுப்பினர். ஜாவி பகுதியில் குறிப்பாக ஜாலான் பெர்செக்குத்துவான் மற்றும் ஜாலான் நெகிரி எனும் இடங்களில் அதிகமான சாலை விபத்துகள் நடைபெறுவதாக அடையாளங்காணப்பட்டுள்ளன.
பெருநாள் காலங்களில் அதிகமான வாகனமோட்டிகள் சாலையைப் பயன்படுத்துவர். எனவே வாகனமோட்டிகள் சாலை விதிமுறைப் பின்பற்றுவதோடு, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சாலையில் பயணிக்க வேண்டும் என்றார். குறிப்பாக மழைக் காலங்களிலும் இரவு நேரத்திலும் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும்.
மோட்டார் சைக்கிள் மற்றும் மிதிவண்டி ஓட்டுனர்கள் அவசியமாகப் பாதுகாப்பு கவச ஆடையை அணிய வேண்டும். ஏனென்றால், இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் இவர்களை அடையாங்காண்பதற்கு இலகுவாக இருக்கும். மேலும், ஜாவி சட்டமன்றத்தில் ஜாலான் சங்காட் சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் கூடிய விரைவில் பொதுப் பணி துறையுடன் இணைந்து அச்சாலை விரிவாக்கம் செய்யப்படும் என்றார் சூன் லிப் சீ.
இந்நிகழ்வில் செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர்களான லூ ஜூ உவாட், ங் மோய் லீ, ரீசால் அமிட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
} else {