![படம் 1: இரண்டாம் துணை முதல்வர் மற்றும் மக்கள் கூட்டணி அரசியல் தலைவர்கள் திருமதி சரஸ்வதியிடம் காசோலை வழங்கினர்](https://www.buletinmutiara.com/wp-content/uploads/2015/04/pix-123-500x254.jpg)
சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட திரு நந்தகுமார், தனியார் மருத்துவமனையில் முதுகெழுப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ரிம 50,000 தேவைப்பட்டது. இத்தகவலை அறிந்த பினாங்கு மக்கள் கூட்டணி தலைவர்கள் மற்றும் இந்து அறப்பணி வாரியம் பாதிக்கப்பட்டவருக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் ரிம 11,000 வழங்கியது. பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வரும் அறவாரியத் தலைவருமான பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள் பினாங்கு இந்து அறவாரியம் சார்பில் ரிம10,000-கான காசோலை வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.. மேலும், பினாங்கு மக்கள் கூட்டணி தலைவர்கள் சார்பில் ரிம 1,000 நிதித்தொகைக்கான காசோலை பாதிக்கப்பட்ட திரு நந்தகோபாலின் மனைவி மற்றும் சகோதரி திருமதி சரஸ்வதியிடம் வழங்கப்பட்டது. இந்த உதவித்தொகை பெற்றுக்கொள்ள திரு நந்தகுமாரின் மனைவி திருமதி தெய்வானை மற்றும் தமது மூன்று சிறு பிள்ளைகளுடன் கொம்தார் அலுவலகத்திற்கு வந்தார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம் கர்பால், ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு நேதாஜி இராயர் கலந்து கொண்டனர். கடந்த 23/3/2015-ஆம் நாள் திரு நந்தகுமாருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டார் என அவரது சகோதரி திருமதி சரஸ்வதி முத்துச்செய்தி நாளிதழிடம் தெரிவித்தார். மேலும் 31/3/2015-ஆம் நாள் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டதோடு உடல் நலம் மேன்மையடைவதாகக் குறிப்பிட்டார். உடனடி உதவிக்கரம் நீட்டி தனது சகோதரருக்கு உதவிப்புரிந்த பினாங்கு இந்து அறப்பணி வாரியம் மற்றும் மக்கள் கூட்டணி தலைவர்களுக்குத் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.