பிறை – புத்தாக்கக் கண்டுப்பிடிப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தும் உலகளாவிய முன்னணி நிறுவனமான AEM, பினாங்கில் பிறை தொழில்பேட்டையில் புதிய வசதியுடன் அதன் செயல்பாட்டை அதிகாரப்பூர்வமாக விரிவுப்படுத்தியுள்ளது.
AEM-இன் முதல் நிறுவனம் பாயான் லெப்பாஸில் அமைந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
AEM தலைமை நிர்வாக அதிகாரி சந்திரன் நாயர் கூறுகையில், புதிய நிறுவனமானது 365,000 சதுர அடி பரப்பளவில், அரங்கம், தர உத்தரவாதம் (QA), கிடங்கு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) ஆய்வகம் மற்றும் பல மேம்படுத்தப்பட்ட சோதனை மேற்கொள்ளுதல் மற்றும் உபகரணங்களைக் கையாளுதல், என்றார்.
“2022 ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் AEM வரலாற்றில் SGD$747 மில்லியன் உயர்ந்த வருவாய் பதிவு செய்துள்ளதன் மூலம் இந்நிறுவனம் மேம்பாடுக் காண்கிறது.
“புதிய நிறுவனமானது, இம்மாநிலத்தின் வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் திறமைகளைத் தட்டியெழுப்பவும், ஏற்கனவே இருக்கும் மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு அதன் செயல்பாடுகளை நெருக்கமாகக் கொண்டுவரவும் AEM அனுமதிக்கும்.
“புதிய குறைக்கடத்தி சாதனங்களுக்கான வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய சோதனை மற்றும் கையாளும் திறன்களை அதிகரிக்க இது எங்களுக்கு உதவும்.
“சிங்கப்பூரில் உள்ள எங்களின் சிறப்பு மையத்துடன் சேர்ந்து, இம்மாநிலத்தில் ஒரு மையமாக எங்கள் நிலையை உறுதிப்படுத்துவோம்,” என்று சந்திரன் தனது உரையில் கூறினார்.
மேலும், மாநில தொழில்முனைவோர் மேம்பாடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அப்துல் ஹலிம் ஹுசைன், இன்வெஸ்ட்பினாங்கு தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ லூ லீ லியான், முதல்வரின் சிறப்பு முதலீட்டு ஆலோசகர் டத்தோஸ்ரீ லீ கா சூன் மற்றும் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் (Mida) (முதலீட்டு மேம்பாட்டு) துணை நிர்வாக அதிகாரி லிம் பீ வியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
AEM இன் புதிய உற்பத்தி நிலையத்திற்கு பினாங்கு மாநிலம் அதன் தேர்வு இடமாக இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாக, சாவ் கூறினார்.
“AEM இன் விரிவாக்கத் திட்டத்துடன், பினாங்கில் உள்ள திறமைசாலிகளுக்கு வேலை வாய்ப்புகள் மட்டுமின்றி, குறைக்கடத்தி மற்றும் மின்னணுவியல் சோதனைத் தீர்வுகளில் உலகளாவிய தலைவரிடமிருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
“இது உள்ளூர் திறன்களை மேலும் மேம்படுத்துவதாகவும், வடக்கு பிராந்தியத்தில் பினாங்கின் நிலையை வலுப்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
“பினாங்கில் உள்ள AEM இன் புதிய உற்பத்தி நிறுவனம், உலகளாவிய மின் மற்றும் மின்னணுவியல் (E&E) துறையில் அதன் போட்டித்தன்மையை வலுப்படுத்த மலேசியாவின் வரைப்படத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
“பினாங்கில் AEM இன் செயல்பாடுகளை விரிவுப்படுத்துவதற்கான முடிவு, உலகளாவிய குறைக்கடத்தி மையமாக திகழச் செய்வதாகும்.
“இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, முதலீட்டாளர்களை ஈடுபடுத்துவதற்கும், திட்டச் செயலாக்கங்களை எளிதாக்குவதற்கும் Mida, இன்வெஸ்ட்பினாங்கு மற்றும் பினாங்கு மேம்பாட்டுக் கழகம் (PDC) ஆகிய நிறுவனங்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
“இன்வெஸ்ட்பினாங்கு வழியாக மாநில அரசு, இம்மாநிலத்தின் ‘E&E’ சுற்றுச்சூழலின் வளர்ச்சியை விரைவுப்படுத்த AEM உடன் இணைந்து பணியாற்ற முனைகின்றது, அதே நேரத்தில் மாநிலத்தின் பினாங்கு2030 இலக்கை அடையவும் ‘கிழக்கு சிலிக்கான் பள்ளத்தாக்கு’ என்ற எங்கள் நிலையை உறுதிப்படுத்துகிறது”, என்றார்.