கொடி மலை நாடாளுமன்றமும் மக்கள் ஓசை நாளிதழும் இணைந்து சித்தரைப் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்தப் புத்தாண்டு விழா கடந்த 26/4/2015-ஆம் நாள் தண்ணீர் மலை தண்டாயுதபாணி ஆலய வளாகத்தில் இனிதே நடைபெற்றது. உலக தமிழர்கள் அனைவரும் கடந்த 14/4/2015-ல் இப்புத்தாண்டைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிகழ்வில் தமிழர்களின் சமய மற்றும் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பல நிகழ்வுகள் இடம்பெற்றன. குறிப்பாக கோலம் வரைதல், பூத்தொடுத்தல், தேவாரம் பாடுதல், சிலம்பம், ஆடம் பாடல் எனப் பல நிகழ்வுகள் இடம்பெற்று வருகையாளர்களின் மனதைக் கொள்ளைக் கொண்டது. பினாங்கு மாநிலத்தில் ஆண்டு முழுவதும் பல பண்டிகைகள் மற்றும் விழாக்கள் கொண்டாடப்படுவது அதன் மகத்துவத்தைச் சித்தரிப்பதாக மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் தெரிவித்தார்.
தமிழர்களுக்காகச் சித்தரைப் புத்தாண்டு விழாவை ஏற்று நடத்துவதில் தாம் பெருமிதம் கொள்வதாக கொடி மலை நாடாளுமன்ற உறுப்பினர் சாய்ரில் கீர் ஜோஹரி தெரிவித்தார். பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசு இந்தியர்களுக்குச் சமய கலாச்சார விழாக்களுக்கு மானியம் வழங்குவது மட்டுமின்றி கல்வி, வேலை வாய்ப்பு, தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுத் திட்டம், மருத்துவம் ஆகிய அனைத்து நிலைகளிலும் ஊன்றுகோளாகத் திகழ்கிறது எனக் குறிப்பிட்டார் மாநில இரண்டாம் துணை முதல்வர்.
இந்நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராக மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, கொடி மலை நாடாளுமன்ற உறுப்பினர் சாய்ரில் கீர் ஜோஹரி, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் திரு தனசேகரன், மக்கள் ஓசை தலைவர் திரு சுந்தர், மாவுண் எஃஸ்திரின் மேம்பாட்டு & பாதுகாப்பு கழகத் தலைவர் திரு ஜெயபாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாட்டுக் குழுவினர் பிரமுகர் அனைவருக்கும் பொன்னாடை போற்றி மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர்.} else {