சிறந்த மாணவர்களுக்கு தொழில்திறன் பயிற்சி அவசியம் – மாநில முதல்வர்

Admin

மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் பினாங்கு மாநிலத்தின் வளர்ச்சியையும் மேம்பாட்டினையும் நிலைநிறுத்த மாநில அரசு தொடர்ந்து பல முயற்சிகளைக் கையாண்டு வருகிறது என்றார். இதனிடையே தரமான மாணவர்களை தொழில்திறன் கல்விக்கு ஈர்த்தல் அவசியம் என பினாங்கு திறன் மேம்பாடு மையம் மற்றும் வவாசான் திறந்த பல்கலைக்கழகம் இடையே நடந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்விற்கு பிறகு நடந்தேறியச் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு வலியுறுத்தினார்.

பினாங்கு திறன் மேம்பாடு மையத்தின் தலைவர் மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ்-விடம் அங்கிருக்கும் இயந்திரங்களின் பயன்பாட்டினை விளக்குகிறார்.

மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் பினாங்கு மாநிலத்தை மேலும் நிலைநிறுத்த சமீப காலமாக பினாங்கு பல முயற்சிகளைக் கையாண்டு வருகிறது என்றார். தற்போது மேலும் பல திறமைசாலிகளை ஈர்த்தல் அவசியம் என பினாங்கு திறன் மேம்பாடு மையம் மற்றும் வவாசான் திறந்த பல்கலைக்கழகம் இடையே நடந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிறகு நடந்தேறியச் செய்தியாளர் சந்திப்பில் வலியுறுத்தினார்.

சாவ் தமது உரையின் போது ஜெர்மன் இரட்டை தொழில் பயிற்சி திட்டத்தில் பெரிய நிறுவனங்கள் பங்கேற்குமாறு பரிந்துரைத்தார். உள்ளூர் பெரிய நிறுவனங்கள் இந்த திட்டத்தில் தீவிரமாக ஈடுபடுவது அவசியம் எனவும் இல்லையெனில் பின்தங்கி விடுவோம் என சூளுரைத்தார்.
பினாங்கு மாநிலம் ஜெர்மனியர்களிடமிருந்து சிறந்த நடைமுறைகளைக் கற்றுக் கொண்டோம், மேலும் மலேசியர்களுக்கு ஏற்றவாறு அவற்றை உள்ளூர் சூழலுக்கு ஏற்ப வெற்றிகரமாக தழுவினோம்.
மலேசியாவில் ஒரு வெற்றிகரமான மற்றும் நிலையான இரட்டை தொழில் பயிற்சியை உருவாக்க, மற்ற மாநிலங்களுக்கான ஒரு முன்மாதிரியாக பினாங்கு மாநிலம் திகழ்வதைக் கண்டு பெருமைப்படுகிறேன் என்றார் சாவ்.

பினாங்கு மாநில அரசு தொடக்கத்தில் இருந்து ஜெர்மன் இரட்டை தொழில் பயிற்சி திட்டத்தை மிகவும் ஆதரித்த வருகிறது.
2015-ஆம் ஆண்டில் இந்த திட்டத்தின் முக்கியத்துவதை அறிந்து அதற்கு ஆதரவாக பினாங்கு மாநில அரசு ரிம2 மில்லியன் நிதியுதவி வழங்கியது.

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து மின்னணு திட்டமும் ஜெர்மன் இரட்டை தொழில் பயிற்சியில் சேர்க்கப்பட்டுள்ளது. மாநில அரசு விளம்பரப்படுத்தவும் மற்றும் ஊக்குவிப்பு நடவடிக்கைளுக்கு விழிப்புணர்வு தரும் பொருட்டு விளம்பர நடவடிக்கைகளுக்கென பல நிதி ஒதுக்கீடுகளை வழங்கி வருகிறது. பினாங்கு மாநில அரசு இலட்சக்கணக்கான தொழில்திறன் திறமைசாலிகளை உருவாக்குவதில் பெரும் நம்பிக்கைக் கொண்டுள்ளது என்பதில் சற்றும் ஐயமில்லை.