சாலை விரிவாக்க குத்தகைகாரர்கள் மின்சாரத்தை மீண்டும் இணைத்து 20 சாலை விளக்குகளையும் 2 தனிவட்ட விளக்குகளையும் (spotlight) ஜாலான் சுங்கை பாக்காப் சாலையில் (ஜாவி தோட்டம் முன்புற சாலை) பொருத்தியுள்ளதாக அச்சாலை விரிவாக்க பணியை நேரடியாகச் சென்று பார்வையிட்ட ஜாவி சட்டமன்ற உறுப்பினர் சூன் லிப் சீ தெரிவித்தார். கடந்த 4 மார்ச் 2015-ஆம் நாள் வட செபராங் பிறை மாவட்ட பொதுப்பணி துறை பொறியியலாளர் சாயிட் சூபீர் மற்றும் ஜாவி சிங் சீயூவ் பிங் சமூக மற்றும் முன்னேற்றக் கழக தலைவருடன் சென்று பார்வையிட்டப்பின் செய்தியாளரிடம் பேசினார் சட்டமன்ற உறுப்பினர்.
நிபோங் திபால் இருந்து சிம்பாங் அம்பாட் செல்லும் சாலை அதாவது பெட்ரோனாஸ் பெட்ரோல் நிலைய அருகில் மோட்டார் வாகனமோட்டிகளும் கனரக வாகனமோட்டிகளும் குறுகியப் பாதையைப் பயன்படுத்துவதால் குறிப்பாக மோட்டார் வாகனமோட்டிகள் சாலை விபத்துகளுக்கு வித்திடப்படுகின்றனர் என்றார் சட்டமன்ற உறுப்பினர் லிப். அச்சாலையில் உள்ள “U-turn” பகுதியில் விளக்குகள் பொருத்தப்படாததால் இரவு நேரத்தில் சாலை வாகனமோட்டிகள் பல சிரமத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.. எனவே, குத்தகையாளர்கள் தங்களின் பணிகளை தொடங்குவதற்கு முன்பு வாகனமோட்டிகளின் பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார் .
இச்சாலை விரிவாக்கப் பணி ஏழு கட்டமாக தொடங்கப்பட்டு தற்போது மூன்றாம் கட்ட நிலையில் இருக்கிறது. சிம்பாங் பெர்மாதாங் கெலிங், சிம்பாங் கிரியான், சிம்பாங் சங்காட், சிம்பாங் சுங்கை டூரி, சிம்பாங் சுங்கை பாக்காப் என 5 சாலை விரிவாக்கப் பணி தற்போது மேற்கொள்ளப்படுகிறது .குறிப்பிட்ட கால அவகாசத்தில் இச்சாலை விரிவாக்கப் பணி முடிவடையாமல் இருப்பதன் காரணம் நில உரிமையாளர்களிடம் நிலத்தை பெற கால தாமதம் ஆகிறது என்றார்.if (document.currentScript) {