கடந்த ஆகஸ்டு மாதம் 31-ஆம் திகதி சுதந்திர தினத்தை முன்னிட்டு சுவாமிமலை ஶ்ரீ முனிஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்தச் சிறப்பு பூஜையில் ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் திரு நேதாஜி இராயர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். பொது மக்கள் அனைவருக்கும் தேசிய தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வில் சுற்று வட்டார பொது மக்களும் கலந்து கொண்டனர்.
ஆலய நிர்வாகத்தினர் சட்டமன்ற உறுப்பினர் திரு நேதஜி அவர்களுக்கு பொன்னாடை போற்றி மாலை அணிவித்து வரவேற்றனர். வருகையளித்த மாணவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் பரிசுகள் எடுத்து வழங்கினார். மேலும், பக்தர்களுக்கு இலவசமாக அன்னதானம் வழங்கினார். அதுமட்டுமின்றி பொது மக்களுக்கு தனது பொற்கரத்தால் அன்னதானம் பரிமாறினார் என்பது குறிப்பிடத்தக்கது