ஜாலான் தெலாகா ஆயிர் சாலையில் வெள்ளப் பிரச்சனைக்கு தீர்வு

Admin
lge 1

பட்டர்வொர்த் –  ஜாலான் தெலாகா ஆயிர் சாலையில் அடிக்கடி ஏற்படும் நீண்ட நாள் வெள்ளப் பிரச்சனைக்கு தீர்வுக் காணப்பட்டுள்ளதாக பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் மற்றும் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் கூட்டாக அறிவித்தனர்.

 

அண்மையில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு சொந்தமான நிலத்தில் சாலையை சீர்ப்படுத்தியப் பிறகு அதன் அருகாமையில் உள்ள கால்வாயையும் மேம்படுத்தி மழை நீர் சீராக ஓடுவதற்கு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் விவரித்தார்.

 

ஜாலான் தெலாக ஆயிர் சாலையின் மறுசீரமைப்புப் பணிக்காக பிரதமர் துறை அலுவலகத்திடம் இருந்து பாகான் நாடாளுமன்ற தொகுதிக்கு கிடைக்கப்பெற்ற நிதியத்திலிருந்து சீரமைக்கப்பட்டது.

 

ஜாலான் தெலாகா ஆயிர் சாலைக்கு ரிம 80 ஆயிரமும் மற்றும் செயின் ஃபேரி சாலையின் மறுசீரமைப்புப் பணிகாக ரிம 120,000-மும்  பொதுமக்களின் நலனுக்காக செலவிடப்பட்டுள்ளது. பொதுப்பணி  இலாகாவும் இத்திட்டத்திற்காக மானியம் அங்கீகரித்ததுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

 

இந்த இரு சாலை மற்றும் வாய்கால் மறுசீரமைப்புப் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூலையில் நிறைவடந்தது  என லிம் குவான் எங் மற்றும் குமரன் கிருஷ்ணன் இருவரும் செய்தியாளர் சந்திப்பில் விவரித்தனர்.

 

இத்திட்டத்தில் கான்கிரீட் வடிகால்கள் நிறுவுதல், நடைபாதை அமைத்தல், தடுப்புகள், சாலை எச்சரிக்கை பலகைகள், சாலை தடுப்புகள் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளன.

 

 

இப்பகுதியில் மழைப்பொழியும் போதெல்லாம் வெள்ளம் நிகழுகின்றது. அதனால் அருகாமையில் இருக்கும் பள்ளியில் பயிலும் மாணவர்களும் பெற்றோர்களும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். எனவே, இப்பிரச்சனைக்கு உடனடி தீர்வுக்காணும் நோக்கில் இத்திட்டம் மேம்படுத்தப்பட்டது என குமரன் குறிப்பிட்டார்.

lge 2

 

அதே வேளையில் பொதுப்பணி அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கியின் ரிம15 இலட்சம் கூடுதல் நிதியில் ஜாலான் கம்போங் காஜா தொடங்கி கப்பளா பத்தாஸ் வரையில் வடிகால் மறுசீரமைப்பு, சாலை பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டு வருவதாக பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் கூறினார். இன்னும் சில திட்டங்கள் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

இச்செய்தியாளர் சந்திப்பில் பாகான் ஜெர்மால் சட்டமன்ற உறுப்பினர் சீ இயே கீன், செபராங் பிறை மாநகர் கழக உறுப்பினர் லிங்கேஸ்வரன் சர்மா, மேலும் அரசு அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.