ஜாலான் மவுன் எர்ஸ்கின் மற்றும் ஜாலான் லெம்பா பெர்மாய் ஆறு வாரங்களுக்கு மூடப்படும்

ஜாலான் மவுன் எர்ஸ்கின் மற்றும் ஜாலான் லெம்பா பெர்மாய் சாலை பிளவை நேரில் சென்று பார்வையிட்டார் பொதுப்பணி,பயன்பாடு மற்றும் போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர் லிம் ஹொக் செங்

அண்மையில் ஜாலான் ஜாலான் மவுன் எர்ஸ்கின் மற்றும் ஜாலான் லெம்பா பெர்மாய் சாலையில் ஏற்பட்ட சாலை பிளவு காரணமாக அதன் மறுசீரமைப்பு காரணமாக அச்சாலை 6 வாரங்களுக்கு மூடப்படும் என பொதுப்பணி,பயன்பாடு மற்றும் போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர் லிம் ஹொக் செங் சம்பவத்தை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். எனவே, அச்சாலையை பயன்படுத்துநர் மாற்றுவழி பாதையை பயன்படுத்துமாறு வலியுறுத்தப்படுகின்றனர்.
தற்போது அச்சம்பவத்தில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் அங்கு வசித்து வந்த ஒரு குடும்பத்தை மட்டும் மற்றொரு இடத்திற்கு சமூகநல துறை மற்றும் வடக்கிழக்கு மாவட்ட நில அலுவலகத்தின் உதவியுடன் பாதுகாப்பு அம்சம் கருதி இடம்பெயர்த்துள்ளதாக குறிப்பிட்டார். பொதுப்பணி துறை இச்சாலை சரிவாக உள்ள அமைப்பில் ஆபத்தாக உள்ளது என்றும் இந்த குறைபாடுகளைச் சரி செய்ய ஒரு பிரத்யேக வடிவமைப்பு (பொறியியல் தீர்வுகளை) உருவாக்க திட்டம் கொண்டுள்ளதாக ஆட்சிக்குழு உறுப்பினர் விவரித்தார்.
மேலும், இச்சாலையை மறுசீரமைப்பு பணிகளை விரைவில் துவங்கப்பட்டு நிறைவு செய்யுமாறு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் பரிந்துரைத்துள்ளார். இந்த சாலையை பழுதுபார்க்க நிதி உதவி தேவைப்பட்டால் சிறப்பு நிதி ஒதுக்கீட்டில் இருந்து மானியம் வழங்குவதாகவும் சூளுரைத்திருந்தார். அதோடு, இச்சாலை பிளவுக்கு பினாங்கு மாநில மேம்பாட்டு பணிகள் காரணி இல்லை என்றும் அவ்வட்டாரத்தில் தற்போது எவ்வித மேம்பாட்டு திட்டமும் அமல்படுத்தவில்லை என தெளிவுப்படுத்தினார் மாநில முதல்வர். இச்சாலையின் கட்டமைப்பு கோளாறு கொண்டுள்ளதால் மழை நீர் எளிதில் அதில் ஊடுருவப்பட்டு இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);