தமிழர் திருநாள் தமிழர்களின் பாரம்பரியத்திற்குச் சான்றாக திகழும் – இங்

Admin

நிபோங் திபால் தமிழர்களின் கலை, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மரபைப் பறைச்சாற்றும் வண்ணமாகத் தமிழர் திருநாள் திகழ்கிறது. பொங்கல் விழா தமிழர் திருநாளாக அணுசரிக்கப்படுகிறது என்றால் மிகையாகாது. அண்மையில் ஜாவி சட்டமன்ற சேவை மையம் மற்றும் நிபோங் திபால் நாடாளுமன்ற சேவை மைய இணை ஏற்பாட்டில் தாமான் பெர்ஜெயா, கூடை பந்து மைதானத்தில் தமிழர் திருநாள்சிறப்பாக நடைபெற்றது.

தமிழர் திருநாள் கொண்டாடப்படுவதன் மூலம் தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் பிரதிப்பலிக்கிறது. அதுமட்டுமின்றி இக்கொண்டாட்டத்தில் பிற இன மக்களும் கலந்து கொள்வதன் மூலம் நிபோங் திபால் வட்டார மக்களுடையே நல்லிணக்கத்தைப் பேண முடியும். மேலும் தமிழர்களின் பண்டையக்கால நடனங்கள் மற்றும் விளையாட்டுகள் இடம்பெறுவதன் மூலம் அவர்களின் மரபுப் பாதுகாக்கப்படுகிறது. இதன் மூலம் இளைய தலைமுறையினர் பண்டையக் கால நடனம் மற்றும் விளையாட்டுகளை அறிந்து கொள்ள வழி வகுக்கிறது,” என ஜாவி சட்டமன்ற உறுப்பினர் இங் மோய் லாய் வரவேற்புரையில் தெரிவித்தார்.

இந்நிகழ்வை சட்டமன்ற உறுப்பினர் இங் மோய் லாய் குத்து விளக்கேற்றி அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார். இத்தமிழர் திருநாள் நிபோங் திபால் தொகுதியில் வருங்காலங்களில் வருடாந்திர விழாவாக அணுசரிக்கப்படும் என இன்முகத்துடன் கூறினார்.

இந்நிகழ்வில் தென் செபராங் பிறை இந்தியர் கழகத் தலைவர் திரு துளசிராமன், செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர்களான டாக்டர் சியூ கிவெங் தியான், ஹெங் ஈ சியுன், பைராம் கம்போங் சமூக நிர்வாக வாரியத் தலைவர் திரு ஜெகன்ஜிவென்ரம் மற்றும் அயர் லிந்தாஸ் கம்போங் சமூக நிர்வாக வாரியத் தலைவர் அந்தோணி டாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கொண்டாட்டத்தில் உறி அடித்தல், சறுக்கு மரம் ஏறுதல், பொங்கல் வைத்தல் மற்றும் மண் பானைக்கு வர்ணம் தீட்டும் போட்டி ஏற்பாடுச் செய்யப்பட்டன. பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளுடன்
மதியம் மணி 1.30க்கு தொடங்கப்பட்ட இவ்விழா ஆடல் பாடல் என அற்புதமான கலை நிகழ்ச்சியுடன் நிறைவை நாடியது. தொன்று தொட்டு வரும் தமிழர்களின் பண்டைய நடனங்களான மயிலாட்டம், பொம்மலாட்டம், கரகாட்டம் என வருகையாளர்களின் கண்ணுக்கு விருந்தாக அமைந்தது.