ஜார்ச்டவுன் – “பினாங்கு மாநில அரசு முன்னாள் கூட்டரசு அரசாங்க நிர்வாகத்தால் திட்டமிடப்பட்ட அனைத்து வீடமைப்புத் திட்டங்களும் செயல்படுத்த வேண்டும் என உத்வேகம் கொள்கிறது. தற்போதை அரசியல் மாற்றத்தால் திட்டமிடப்பட்ட அனைத்து வீடமைப்புத் திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்த உறுதிக்கொள்ள வேண்டும்,” என உள்ளூராட்சி, வீடமைப்பு மற்றும் நகர்புற & கிராமப்புற மேம்பாடு திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெடிப் சிங் டியோ தெரிவித்தார்.
வீடு என்பது பொது மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று என்பதால் பிரதமர் டான் ஶ்ரீ மொஹிடின் யாசின் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கும் கூட்டரசு அரசாங்கத்திடம் தற்போதைய முன்னாள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் குறித்த நிலைப்பாடு அறிய கடிதம் அனுப்பப்படும் என ஜெக்டிப் விளக்கமளித்தார்.
மாநில செயலாளர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் வீடமைப்புப் பிரிவு கூட்டரசு அரசாங்கத்திடம் கடிதம் அனுப்பி முன்னாள் விண்ணப்பங்கள் மற்றும் மாநில திட்டமிடல் குறித்த நிலைப்பாடு அறிவது அவசியம், ஏனெனில், அனுமதி கிடைக்கப்பெற்ற திட்டங்கள் தொடருமா அல்லது கைவிடப்படுமா என தெரிய வேண்டும்,” என செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜெக்டிப் இவ்வாறு கூறினார்.
பெங்காலான் கோத்தா சட்டமன்ற உறுப்பினர் டேனியல் கூய் ஜி சென், தே லாய் எங் (கொம்தார் சட்டமன்ற உறுப்பினர்), சுங்கை பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் சியூ கிம், ஓங் ஆ தியோங் (பத்து லஞ்சாங் சட்டமன்ற உறுப்பினர்) மற்றும் வீடமைப்புப் பிரிவின் மூத்த உதவிச் செயலாளர் ‘அய்னுல் ஃபதிலா சம்சூடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக 2020-ஆம் ஆண்டுக்கான முதல் வீடமைப்புத் திட்டம் குறித்த சந்திப்புக்கூட்டம் கொம்தாரில் நடைபெற்று வீடமைப்புத் திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
“அடுத்த சந்திப்புக்கூட்டத்திற்குள் வீடமைப்புத் திட்டமிடல் மற்றும் விண்ணப்பங்களின் நிலைப்பாடு அறியப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. முன்னாள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் மேம்பாடுக் கண்டு வரும் திட்டங்கள் முழுமைப்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
“அனைவருக்குமான பிரதமர் என அறிவிப்பு வழங்கிய பிரதமர் கருத்தில் பினாங்கு மாநிலமும் உள்ளடங்கும்,” என கருதுவுதாகக் கூறினார்.
மலேசிய வீடமைப்புப் பராமரிப்பு நிதியத்தின் (TPPM), கீழ் ரிம72,325,669.59 மதிப்புடைடைய 123 விண்ணப்பங்களில் 29 அங்கீகரிக்கப்பட்டன. பிற விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என தீர்மானிக்கப்படவில்லை. மேலும், வீடமைப்புப் பராமரிப்புத் திட்டத்தின்(PPP) கீழ் 14 விண்ணப்பங்களில் 10 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
மக்கள் வீடமைப்புத் திட்டம் (PPR) பினாங்கில் நிர்மாணிப்பதற்கான ஐந்து தளங்கள் அடையாளம் காணப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டன, இருப்பினும் அதன் செயல்பாட்டு குறித்த நிலை தெரியவில்லை.
இந்த 2020 வரவுசெலவுத் திட்டத்தில் முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் ‘வாடகை கொள்முதல் திட்டம்’ (rent to own scheme) அறிமுகம் செய்து அதனைச் செயல்படுத்த ரிம3 பில்லியன் கூட்டரசு அரசாங்க நிதி உத்தரவாதம் அறிவித்திருந்தார். இத்திட்டம் பற்றிய தகவலும் அறியப்பட வேண்டும், என கேட்டுக்கொண்டார்.
எவ்வாறாயினும், இத்திட்டங்கள் செயலாக்கம் குறித்த விளக்கம் உடனடியாக தெளிவுப்படுத்த வேண்டும் என்று கோரவில்லை, இருப்பினும் புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டப் பின்னர் இத்திட்டங்கள் குறித்த நிலைப்பாடுகள் பற்றிய கருத்துகள் பெறுவேன் என நம்புவதாக ஜெக்டிப் கூறினார்.