தாமான் இண்ராவாசேவில் புதிய சந்தை நிர்மாணிக்கும் அடிக்கல்நாட்டு விழா அண்மையில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினை அதிகாரப்பூர்வமாக மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழக தலைவர் மைமுனா முகமது சாரிப் ஆகியோர் துவக்கி வைத்தனர். வேல்விஷ் கோன்செப் நிறுவனத்தின் மேம்பாட்டிற்காக வியாபாரிகள் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு மாற்று இடம் வழங்க பிறை சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முயற்சியின் பலனாக இப்புதிய சந்தை நிறுவப்படவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
நிகழ்வில் சிறப்புரை வழங்கிய மாநில முதல்வர் இம்மேம்பாட்டுத் திட்டம் கடந்த 8 செப்டம்பர் 2015 தொடங்கபட்டு இவ்வாண்டு நவம்பர் இறுதியில் முடிவடையும் என்றார். இத்திட்டத்திற்காக ஆறாண்டு காலம் மாநில அரசின் முயற்சியில் கிடைக்கப்பெற்ற கூடுதல் வருமானத்திலிருந்து ரிம 148,605.81 செலவிடப்படவுள்ளதாகக் கூறினார். இப்புதிய சந்தை மேம்பாட்டுத் திட்டத்தில் வடிக்கால் அமைப்பு, சுவர் நிர்மாணிப்பு, மின்சார வசதி, மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் நிறுவப்படவுள்ளது.
மாநில அரசு பினாங்கு வாழ் மக்களின் நலனில் என்றும் மிகுந்த அக்கரை கொண்டுள்ளது என தமதுரையில் கூறினார் மாநில இரண்டாம் துணை முதல்வரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமி. பொதுமக்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அருகில் இருக்கும் சேவை மையத்தை நாட தயங்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரிராணி பட்டு, ஆட்சிக்குழு உறுப்பினர் லிம் ஹொக் செங், செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர்களான திரு சத்தீஸ் முனியாண்டி மற்றும் திரு டேவிட் மார்ஷல் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);