தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினார் மாநில இரண்டாம் துணை முதல்வர்

பினாங்கு மத்திய செபராங் பிறையில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமையான கம்போங் மானிஸ் குடியிருப்புப் பகுதி நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இவர்களுக்கு உதவிபுரியும் வகையில் பினாங்கு மாநில ஆளுநர் பேரிடர் நிதி ஒதுக்கீட்டிலிருந்து ஒரு குடும்பத்திற்கு தலா ரிம 1000 உதவித்தொகையாக எடுத்து வழங்கினார் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி. வியாபாரம் செய்து பொருள் ஈட்டி தந்த எங்கள் கடைகள் தீயில் சாம்பலாகின என கண்ணீர் மல்க கூறினார் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர். தங்களின் துன்பத்தில் பங்கெடுத்து கொண்ட இரண்டாம் துணை முதல்வர், பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் குமாரி கஸ்தூரி பட்டு மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர்கள் அனைவருக்கும் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து

படம் 1: தீ விபத்தில் உடைமைகளை இழந்த கம்போங் மானிஸ் குடியிருப்பாளர்களுக்குக் காசோலை எடுத்து வழங்கினார் மாநில இரண்டாம் துணை முதல்வர் ப.இராமசாவி.(உடன் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் குமாரி கஸ்தூரி பட்டு
படம் 1: தீ விபத்தில் உடைமைகளை இழந்த கம்போங் மானிஸ் குடியிருப்பாளர்களுக்குக் காசோலை எடுத்து வழங்கினார் மாநில இரண்டாம் துணை முதல்வர் ப.இராமசாவி.(உடன் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் குமாரி கஸ்தூரி பட்டு

கொண்டார் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்.
பிறை சேவை மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மதிப்பிற்குரிய ப.இராமசாமி அவர்கள் தீயில் உடைமைகளை இழந்தவர்களுக்கு அதன் முழு விவரத்தையும் இழப்பையும் மாவட்ட மன்றம் ஆய்வுச் செய்து வருவதாக தெரிவித்தார்.
மேலும், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நான்கு வீடுகள் திரான்ஸ் கிரியான் தோட்டத்தில் தீக்கீரையானது. இதில் வீட்டை இழந்த மு.யோகம்மா அவர்களுக்கு உதவும் வகையில் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் அவ்வீட்டை மறுசீரமைப்பு செய்ய தமது சொந்த மானியத்திலிருந்து நிதியுதவி வழங்கினார். கடந்த 25 ஜனவரி 2015-ஆம் நாள் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டுக்கான சாவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட மாநில இரண்டாம் துணை முதல்வர் தமது பொற்கரத்தால் சாவி எடுத்து வழங்கினார். மேலும், செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய துணை முதல்வர் அவர்கள் பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசு பொதுமக்களின் தேவைகளை அறிந்து உதவிக்கரம் நீட்டுவதை உறுதிப்படுத்தினார். திருமதி.மு.யோகம்மா மக்கள் கூட்டணி அரசிற்குத் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொண்டார்.document.currentScript.parentNode.insertBefore(s, document.currentScript);