தெலுக் பஹாங் நீர் அணை மற்றும் நீர் வீழ்ச்சி தளத்தில் எதிர்நோக்கும் வாகன நிறுத்தும் பிரச்சனையை களையும் பொருட்டு பினாங்கு நீர் விநியோக வாரியம் புதிய வாகனம் நிறுத்தும் இடத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால் 4,500 மீட்டர் பரப்பளவில் புதிய கார் நிறுத்தும் இடம் அமைப்பதாக செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். தெலுக் பஹாங் நீர் அணை அருகாமையிலே பட்டாம்பூச்சி கூடம் அமைந்திருப்பதால் சுற்றுப்பயணிகள் இலகுவாக வாகனம் நிறுத்துவதற்காக 30 கார் நிறுத்தும் இடம் மற்றும் 12 பேருந்து நிறுத்தும் இடம் நிறுவ எண்ணம் கொண்டுள்ளதாக பினாங்கு நீர் விநியோக வாரிய தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஜாசானி மைடின்சா குறிப்பிட்டார்.
இத்திட்டம் மேற்கொள்ள மேம்பாட்டளர்கள் திறந்த குத்தகை முறையில் விண்ணப்பிக்கலாம் என்றார். வருகின்ற அக்டோபர் மாதம் தொடங்கும் இத்திட்டம் டிசம்பர் மாதம் முழுமை பெறும் என மேலும் தெரிவித்தார். தெலுக் பஹாங் நீர் அணை பகுதியில் வாகன நிறுத்தும் இடம் அமைப்பதால் பாதுகாப்பு கருதி பொது மக்கள் காலை மணி 7.00 முதல் மாலை மணி 7.00 வரை மட்டுமே வாகனம் நிறுத்த அனுமதிக்கப்படுவர்.document.currentScript.parentNode.insertBefore(s, document.currentScript);