பினாங்கு மாநிலத்தில் திறப்புவிழாக் கண்ட தேக் டோம் எனும் மையம் அறிவியல், தொழில்நுட்பம் , பொறியியல், தொழில்நுட்ப குவிமாடம் மட்டுமின்றி பல்வேறு கல்வித் திட்டங்கள், பட்டறை மற்றும் அறிவியல் முகாம்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. 28 பில்லியன் பொருட்செலவில் கட்டப்பட்ட இம்மையம் கடந்த 16 ஜூலை 2016-ஆம் நாள் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
பினாங்கு மாநிலத்தை அறிவார்ந்த நகரமாக உருவாக்கும் பல அரிய முயற்சிகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. “இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள்” என்பதனை உறுதிச்செய்யும் நோக்கத்தில் மாநில அரசு இந்தத் திட்டத்தில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் பங்கெடுப்பு அதிகரித்து அனைத்துலக ரீதியில் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கும் இலக்கைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்..
அண்மையில் தெக் டோம் அறிவியல் மையத்திற்கு “வைட்அவ்ஸ்” பாலர்ப்பள்ளியைச் சார்ந்த 150 மாணவர்கள் கல்வி சுற்றுலா மேற்கொண்டனர். பாலர்ப்பள்ளியின் தலைமை நிர்வாகி ஜேரி லோ தலைமையில் மாணவர்களும் அவர் தம் பெற்றோர்களும் அமைக்கப்பட்டுள்ள 120 அறிவியல் காட்சிக்கூடங்களையும் பார்வையிட்டனர்.
அறிவியல் மையமாகத் திகழும் தேக் டோம் மையத்தில் 6 முதன்மை காட்சியகங்கள் குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், வாழ்க்கை தொழில்நுட்பம், ரோபாட்டிக்ஸ், ஒளியியல், மின்காந்தவியல் இடம்பெறுகின்றன. பாலர்ப்பள்ளி மாணவர்களுக்கென பல காட்சியங்கள் அமைக்கபப்ட்டுள்ளன. இதனிடையே, தேக்-டோம் மூலம் எழுச்சியூட்டும் கண்டுப்பிடிப்புகளை எதிர்காலத்தில் உருவாக்கவும் சிறுவர்களிடையே இருக்கும் பல புத்தாக்க திறன்களை வெளிக்கொணரவும் ஒரு மையக்கல்லாகத் திகழும்.
தேக் டோம் மையத்தில் மாணவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் சுற்றுலா மேற்கொள்ளலாம். வித்தியாசமான அனுபவத்தை மேற்கொள்ள தேக் டொம் அறிவியல் மையத்திற்கு வருகை மேற்கொள்வீர் . புதன் முதல் திங்கள் கிழமை வரை காலை மணி 10.00 முதல் மாலை மணி 6.00 வரை தேக் டோம் மையத்திற்குச் சுற்றுலா மேற்கொள்ளலாம்.document.currentScript.parentNode.insertBefore(s, document.currentScript);