இவ்வாண்டு 61-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் புதிய சரித்திர கொண்டாட்டமாக அமையும் என செபராங் பிறை நகராண்மை கழக உறுப்பினர் டேவிட் மார்ஷல் ஜுரு அவுட்டோ சிட்டியில் நடைபெற்ற சுதந்திர தின வாகன மற்றும் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பை தொடக்கி வைத்த பின்னர் இவ்வாறு குறிப்பிட்டார். பினாங்கு புதிய நம்பிக்கை கழகத்தின் ஏற்பாட்டில் இந்த அணிவகுப்பு சிறப்பாக நடைபெற்றது பாராட்டக்குரியதாகும்.
சுதந்திர உணர்வோடு ‘நான் ஒரு மலேசியன்‘ என அங்கு குழுமியிருந்த பொதுமக்கள் கூவி மகிழ்ந்தனர். இன மத பேதமின்றி மூவின மக்களும் இப்பேரணியில் கலந்து சிறப்பித்தனர். இதனிடையே, நம் நாட்டு கொடியை வீடு, வாகனம், அலுவலகம் என அனைத்து இடங்களிலும் பறக்க விடுவோம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். இப்பிரச்சாரத்தில் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் நாட்டு பற்றை வெளிப்படுத்தினர்.