தேசிய வங்கி மலிவு வீடுகள் வாங்குநரின் கடன் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் – திரு.ஜெக்டிப்

Admin
செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெட்க்டிப் சிங் டியோ
செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெட்க்டிப் சிங் டியோ

பினாங்கு மாநில அரசு 2014-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய மலிவுவிலை வீடமைப்புத் திட்டத்தின் கீழ் தற்போது பன்னிரண்டு வீடமைப்பு திட்டங்களில் 22,512 வீடுகள் கட்டப்படவுள்ளதாக கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ. தற்போது முதல்முறையாக வீடு வாங்க விண்ணப்பிப்பவர்களின் கடனுதவி விண்ணப்பங்கள் அதிகமாக நிராகரிக்கப்படுவதாகக் கூறினார். இப்பிரச்சனையைக் களைய தேசிய வங்கி மலிவு விலை வீடுகள் வாங்குநரின் கடன் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மத்திய அரசு அனைத்து மக்களும் வீடுகளை பெற்றிருக்க வேண்டும் என்ற சிந்தனையை அங்கீகரிக்கும் பொருட்டு தேசிய வங்கியின் கீழ் ஒரு புதிய கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்றார். இதன்வழி, குறைந்த வருமானம் பெறும் வர்க்கத்தினர் தங்கள் வீடுகளை பெறும் கனவை நனவாக்க முடியும் என்பது திண்ணம்.
இதனிடையே, 100% வங்கி கடனுதவிக்கு தகுதிப்பெறாத விண்ணப்பதாரர்கள் இன்னும் இருக்கும் நிலையில் மேம்பாட்டாளர் வட்டி செலுத்தும் திட்டத்தை (Developer Interest Bearing Scheme) மீண்டும் அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதன்வழி,வங்கி கடனுதவியை திரும்ப செலுத்தும் காலவரையை நீடிக்கச்செய்து குறைந்த வருமானம் பெறுவோர் வீடு வாங்க தகுதிப்பெற செய்யலாம் என சூளுரைத்தார். அதோடு, விண்ணப்பதாரரின் வருமான செலவினங்களுக்கு ஏற்ப அவர்கள் கடனுதவி செலுத்தும் வாய்ப்பினை ஏற்படுத்த தேசிய வங்கி பரீசீலிக்க வேண்டும் என்றார்.
பினாங்கு மாநில அரசு பிபிஆர் வீடுகளை கட்டுவதற்கு நிலங்களை அடையாளங் கண்டு வருகிறது. நிலங்களை அடையாளங்கண்ட பின்னர் மத்திய அரசு விடுத்த வாக்கினைப்போன்று பினாங்கு மாநிலத்தில் பிபிஆர் வீடுகளை அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் ஆட்சுக்குழு உறுப்பினர் திரு.ஜெக்டிப்.