தேர்தல் ஆணையம் சாவ் கொன் இயோவ் உட்பட இரண்டு ஒற்றுமை வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கலை அங்கீகரித்தது

Admin

ஜார்ச்டவுன் – காலை 11.00 மணி அளவில், பினாங்கு மாநிலத் தேர்தலில் (PRN) போட்டியிடும் மூன்று ஒற்றுமை வேட்பாளர்களையும் தேர்தல் ஆணையம் (SPR) இங்குள்ள ஸ்ரீ பினாங்கு அரங்கத்திற்கு அருகிலுள்ள வேட்பாளர் நியமன மையத்தில் உறுதி செய்தது.

N26 பாடாங் கோத்தா சட்டமன்றத் தொகுதியில், வேட்பாளர் சாவ் கொன் இயோவ் போட்டியிடுவதை N26 ஆணைய அதிகாரி, TPr. ரோஷித்தா ஹாமிட் உறுதிப்படுத்தினார்.

தே லாய் ஹெங் மற்றும் வோங் யுயி ஹர்ங் ஆகியோர் முறையே N28 கொம்தார் மற்றும் N27 பெங்காலான் கோத்தாவில் போட்டியிடுவார்கள் என்பதையும் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியது.

ஒற்றுமை வேட்பாளர்களான இம்மூவரும் தேசிய கூட்டணியில் இருந்து இருமுனைப் போட்டியை மட்டுமே பெறுவார்கள், மேலும் இங்கு சுயேச்சை வேட்பாளர்கள் யாரும் போட்டியிடவில்லை.

சாவ் தனது வேட்புமனுவை சமர்பித்த பின்பு, பக்காத்தான் ஹராப்பான் தரப்பில் இருந்து தனக்கு வற்றாத ஆதரவு அளித்து வரும் ஆதரவாளர்கள் மற்றும் தோழர்களுக்கும் நன்றித் தெரிவித்தார்.

“ஆகஸ்ட் 12ஆம் தேதிக்குப் பிறகு (அதாவது வாக்குப்பதிவு நாள்) ஒற்றுமை கூட்டணியின்
வெற்றியுடன் மீண்டும் சந்திப்போம்.
தேர்தல் பிரச்சாரம் சீராக நடக்கும் என்று நம்புகிறேன்,” என மாநில ஜனநாயக செயல் கட்சி தலைவருமான சாவ் கொன் இயோவ் இவ்வாறு தெரிவித்தார்.

அதற்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ‘ஒற்றுமை’ முதலமைச்சர் வேட்பாளரான கொன் இயோவ், தேசிய முன்னணியின் 6 பேர் உட்பட 40 ஒற்றுமை வேட்பாளர்களும் இம்முறை மாநில சட்டமன்றத் தேர்தலில் உடன் இணைந்து போட்டியிடத் தகுதி பெறுவதை உறுதி செய்வது குறித்து இன்று கவனம் செலுத்துவதாகக் கூறினார்.

“நான்காவது தவணைக்கான மாநில பொதுத் தேர்தல் ஆணையைப் பெற, பழைய புத்தகத்தை மூடிவிட்டு புதிய புத்தகத்தைத் திறக்க வேண்டும்.

“உண்மையில், புறக்கணிப்பு பற்றி எங்களுக்கு எந்த செய்தியும் வரவில்லை, ஏனெனில் அனைத்து (வாக்களிக்கும்) பகுதிகளிலும், ஆற்றல் மற்றும் வளங்களில் மாற்றம் ஏற்கனவே நிகழ்ந்துள்ளது.

“உதாரணமாக, பெங்காலான் கோத்தாவில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (டேனியல் கூய் ஜி சென்) சகோதரர் வோங்கிடம் (யுயி ஹார்ங்) தேர்தல் இயந்திரங்களை ஒப்படைத்துள்ளார். அதே நேரத்தில் சகோதரி சோங் எங் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) சகோதரர் டேனியல் கூயிடம் (ஜி சென்) இயந்திரங்களையும் வளங்களையும் ஒப்படைத்துள்ளார்.

“இரண்டு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே சுயேச்சையாக இயங்கும் கட்சி உறுப்பினர்கள் இருப்பது சாத்தியமே; இந்த பகுதியில் அது ஒரு பிரச்சனையாக இருக்காது. ஏனென்றால், எங்களின் வளங்கள் எல்லா மட்டங்களிலும் இருப்பதால், இதுபோன்ற பிரச்சனைகளை (அதாவது கட்சியின் புறக்கணிப்பு) எதிர்கொள்ளாமல் இருக்க பகிர்ந்தளிக்க முடியும்,” என்று அவர் கூறினார்.

மேலும், PH மற்றும் BN-ஐ உள்ளடக்கிய ஒற்றுமை இயந்திரக் குழு ஆகஸ்ட்,12 வரை குழு முறையில் பிரச்சாரம் செய்யும் பாரம்பரியத்தைத் தொடரப்படும் என்று கொன் இயோவ் கூறினார்.

அந்தந்த வேட்பாளர்களின் அட்டவணைப்படி மட்டுமே வீடு வீடாக வாக்காளர்களைச் சந்திக்கும் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

பக்காத்தான் ஹராப்பானின் ஏறக்குறைய 300
ஆதரவாளர்கள் சிவப்பு நிற ஆடையுடன் டவுனிங் தெருவில் அமைந்துள்ள தபால் நிலையத்திலிருந்து ஸ்ரீ பினாங்கு அரங்கத்தில் உள்ள வேட்புமனு தாக்கல் மையத்திற்கு ‘பக்காத்தான் ஹராப்பான், நம்மால் முடியும்! என முழக்கமிட்டு கொண்டு விரைந்தனர்.