‘ராஜா பழம்’ என்று அழைக்கப்படும் டுரியான் பழ விழா நான்காவது முறையாகப் பினாங்கு மாநிலத்தில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழா 1 ஜூன் தொடங்கி 31 ஜூலை வரை காலை மணி 11.00 தொடங்கி மாலை மணி 7.00 வரை நடைபெறுகிறது. இவ்விழா அஞ்சோங் இண்டா மற்றும் பாலீக் புலாவ் நீயூ மார்கெட் எனும் தலத்தில் இடம் பெறுகிறது.
இந்த டுரியான் விழா ‘பாலீக் புலாவ்’ எனும் தலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளைக் கவருவதற்கு நடத்தப்படுகிறது என்றால் மிகையாகாது. இவ்விழா பினாங்கு மாநில அரசின் சுயமுயற்சியால் நடத்தப்படுகிறது என்றார் சுற்றுலா மற்றும் கலாச்சார மேம்பாட்டு ஆட்சிக் குழு உறுப்பினர் லாவ் ஹெங் கியாங். மேலும், பாலீக் புலாவ் டுரியான் பழத்தை விமர்சனம் செய்வதும் மட்டுமன்றி பாலீக் புலாவ் தலத்தை அனைத்துலக சுற்றுலாத்தலமாக இடம் பெற செய்வதே இவ்விழாவின் முதன்மை நோக்கம் என தொடக்க விழாவில் எடுத்துரைத்தார்.
மேலும், சிங்கப்பூர் மற்றும் ஹொங் காங் ஆகிய அயல் நாடுகளிலிருந்து இந்த ராஜ பழத்தைச் சுவைப்பதற்காக அதிகாமான சுற்றூப்பயணிகள் வருகையளிக்கின்றனர் என்றார். அதோடு, அமெரிக்கா நாட்டிலிருந்து 20 சுற்றுப்பயணிகள் வரும் ஜூலை மாதமன்று ‘உலக டுரியான் சுற்றுலாவை’ அஞ்சோங் இண்டாவிற்கு மேற்கொள்ளவுள்ளனர் என்பது சாலச் சிறந்தது.
தொடக்க விழாவில் மாநில முதல்வரின் துணைவியார் பேட்டி சீயூ, மாநில சட்ட மன்ற சபாநாயகர், டத்தோ அப்துல் அலிம் உசின், விவசாயம், கிராமப்புற வளர்ச்சி மற்றும் சுகாதாரக் குழு ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் அபிப் பகார்டின் மற்றும் பிற சட்ட மன்ற உறுப்பினர்கள் யாவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவில் கலந்து கொள்பவர்கள் டுரியான் பழத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளைச் சுவைக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. மேலும் குடும்ப சகிதமாக வந்து இவ்விழாவில் கலந்து கொண்டு பாலீக் ப்லாவின் பொக்கிசமான டுரியான் பழத்தைச் சுவைக்க அழைக்கப்படுகின்றனர். ‘Ang Hae’, D2, 24, Ka Pi Li, ‘ho Lor, ‘Gan Ja, dan Cheh Phoay Kia’ ஆகிய பலத்தரப்பட்ட டுரியான் பழங்கள் இவ்விழாவில் விற்கப்படும். இவ்விழாவைப் பற்றிய மேல் விபரங்களுக்கு 016-411 0000 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும்.
படம் 1:
தொடக்க விழாவில், டத்தோ அப்துல் அலிம் உசின், சுற்றுலா மற்றும் கலாச்சார மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் லாவ் ஹெங் கியாங், மாநில முதல்வரின் துணைவியார் பேட்டி சீயூ மற்றும் பிற சட்டமன்ற உறுப்பினர்கள் யாவரும் டுரியான் பழத்தைச் சுவைக்கின்றனர்.