நாட்டின் மக்கள் தொகையில் அதிகளவில் பெண்களாக இருந்தபோதும், பெண் வாக்காளர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளின் பங்கேற்பு இன்னும் குறைந்த நிலையில் உள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற 13வது பொதுத் தேர்தலில் 10.8% பெண்கள் மட்டுமே நாடாளுமன்ற உருப்பினர்களாக (222 தொகுதிகளில் 24 இடங்களே) பிரதித்துவம் பெற்றுள்ளனர் மற்றும் 11.5% மாநில சட்டமன்ற பெண் பிரதிநிதித்துவத்தில் இடம் பெற்றுள்ளனர். தென்கிழக்கு ஆசியாவிலே இரண்டாவது குறைவான பெண் பிரதிநிதிதுவம் பெற்ற நாடாக நம் நாடு திகழ்கிறது.
ஜனநாயகத்தில் பெண்களின் முழு பங்கேற்பு அர்த்தமுள்ளதாக இருந்த போதும், நாட்டின் வெற்றி மற்றும் வளர்ச்சியில் இன்னும் பிந்தங்கியுள்ளது. மலேசியாவில் பல்வேறு துறைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் இன்னும் குறைவாகவே உள்ளது. பெரும்பாலும் பெண்கள் பல்வேறு சவால்கள் மற்றும் தடைகளை எதிர்கொள்கின்றனர், இதற்கு பாலின சமத்துவமின்மையே முக்கியக் காரணமாகும். பாலின ஏற்றத்தாழ்வால் சமூக-பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது.
மகளிர், குடும்பம் மற்றும் சமூக அமைச்சு மற்றும் ஐ.நா மேம்பாட்டு மையமும் (UNITED NATIONS DEVELOPMENT “UNDP”) ஒன்றிணைந்து நடத்திய “மலேசிய பெண்களில் குறைந்தது 30% சதவீகிதம் முடிவெடுக்கும் பதவிகளை வகிக்கும்”, என்றத் திட்டத்தின் 2008ஆம் ஆண்டறிக்கையில் மலேசியாவில் ஆறுத் துறைகளில் பெண்கள் சவால்களை எதிர்க்கொண்டுள்ளனர், அவை பாராளுமன்றம் மற்றும் அரசியல் கட்சிகள், சட்டமன்றம், மாநில ஆட்சிக்குழு மற்றும் கவுன்சல், மத்திய அரசாங்கம், அரசுசார்ந்த அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், நீதித்துறையில் (சிவில், இஸ்லாமிய மற்றும் பூர்வீக நீதிமன்றம்) மற்றும் தனியார் துறையும் குறிப்பிடத்தக்கதாகும். பெண்களின் பங்கேற்புக்கு தடையாக வேலை மற்றும் குடும்பம் என்று “இரட்டைச் சுமைகளை” எதிர்க்கொள்கின்றனர். அதோடு கலாச்சாரம், நெறிகள் என்ற அறியாமை அவர்களுக்குள்ளே ஆணி வேராக அமைந்துவிட்டதாலும் இந்நிலை நேர்கிறது.
பாலின சமத்துவமின்மையால் அரசியல் மற்றும் தலைமைத்துவ பதவிகளுக்கு, திறமையான ஆற்றல்மிக்க பெண்களின் வாய்ப்புக்களை இழக்க நேரிடுகிறது. இந்நிலை சமுதாயத்திற்கும் மற்றும் நாட்டிற்கும் பாதிப்பே விளைவிக்கின்றது. பெண்களின் பங்களிப்பால் சிறந்த திறமையான வளர்ச்சியான ஒரு ஜனநாயகத்தை உருவாக்கமுடியும். நிலையான ஜனநாயகம் என்றால் ஆண் பெண் பாகுப்பாடின்றி அனைவருக்கும் சமத்துவம் கொடுப்பதாகும், ஆதலால் தான் அரசியலில் பெண்கள் தீவிரமாக பங்கு பெற ஊக்குவிக்கவும் சிறந்த நடவடிக்கை, மற்றும் சீர்திருத்தம் அவசியமாகும்.
பெண்களுக்கு அரசியலில் பிரதிநிதித்துவம் மற்றும் சம வாய்ப்புகள் வழங்கப்படுவதை உறுதிச்செய்ய நடப்பு அமைப்பு தேர்தல் முறை மற்றும் விளைவுகளை ஆய்வுச் செய்வது அவசியமாகும். குறிப்பாக, தேர்தல் வேட்பு மணு தாக்கல் முதல் தேர்தல் முடியும்வரை. “ACE” நெட்வொக் வாக்காளர்கள் கூறுவது போல , (First-Past-The-Post) FPTP அமைப்பின் சமத்துவ அடிப்படையில் தேர்தல் முறைப் போராட்டத்தில் சில விஷியங்களில் பலவீனங்களாக உள்ளன என “ACE” நெட்வொர்க் வாக்காளர்கள் கூறுகின்றனர். “ACE” நெட்வொர்க் வாக்காளர் கூறுவது போல FPTP விதிமுறையின் கீழ் சிறுப்பான்மை பெண்களுக்கே பிரதிநிதித்துவம் கிடைக்கிறது, பெரும்பாலான வாக்காளர்களின் பகுதியில், ஆதரவையும் இழப்பையும் தவிர்ப்பதற்காக, கட்சி சில பகுதிகளில் நன்கு அறிமுகமான வேட்பாளரை நியமிக்கிறது. பெண்களின் பெயர்கள் வாக்குச் சீட்டில் இடம்பெறுவது மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. பெண்கள் அரசியலில் பங்குப்பெற கலாச்சாரம் மற்றும் சமூகமும் மற்றொரு சவாலாக அமைந்துள்ளது ஏனெனில் தேர்தல் முறையில் முதலில் மக்கள் தொகை மற்றும் நிலப்பரப்பரப்பைச் சமநிலைபடுத்தவே அனுமதித்தது ஆனால் பாலின சமநிலையை உருவாக்க கட்சி அல்லது அரசாங்கம் அனுமதிக்கவில்லை . “FPTP” தேர்தல் முறை அனைத்து இயல்புகளையும் சாதகமானதாக நடத்தவள்ளது.
பெரிய நிறுவனங்களின் சீர்த்திருத்தத்தின் ஒரு பகுதியாக தேர்தல் சீர்த்திருத்தம் முக்கிய உத்திகளை அடையாளம் கண்டுள்ளது. “FPTP” போன்ற அமைப்பு குறைப்பாடுகளை அகற்றி சமத்துவத்தை உருவாக்க முயற்சிக்கிறது, இதன் மூலம் கூடுதல் பிரதிநிதித்துவத்திற்கு வழி வகுக்கும். கல்விச் சார்ந்த ஆய்வின் படி “FPTP” அமைப்பைக் கொண்ட நாடுகளை ஒப்பிடுகையில் பிற நாட்டு பெண்களின் பிரதிநிதித்துவம் அதிக வேறுப்பாடுகளை காட்டுகிறது. .ஒரு நியாமான தேர்தலுக்கு வழிவகுப்பதால் அதிக வாக்குகளை பெறமுடியும். விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் ஒரு நியாயமான தேர்தல் முடிவுகளில் , ஒரு கட்சி 49 சதவிகீதம் வாக்குகளைப் பெற்றிருந்தாலும் பெரும்பான்மை 49 இடங்களே கிடைக்கும், அது 50 அல்லது 60 சதவிகீதங்களுக்கு மேற்பட்டதாக இருக்கும்.
எனவே பெண்கள் முடிவெடுக்கும் திறன் எண்ணிக்கை அதிகரிக்க பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகம் மற்றும் (Friedrich-Ebert-Stiftung “FES” International) மையம் ஒன்றிணைந்து “பாலின தேர்தல் சீர்திருத்தம்” எனும் தேசிய மாநாட்டை எதிர்வரும் 26 மற்றும் 27 ஆகஸ்ட்டு 2016 ஏற்பாடுச் செய்துள்ளது. இம்மாநாட்டில் , மத்திய, மாநில மற்றும் உள்ளுர் அரசு, தலைவர்கள் மற்றும் முடிவெடுக்கும் அதிகாரிகள், அரசியல் கட்சிகள், கல்வி நிறுவனங்கள், சீவில், சமூகம் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் தனிநபர்களும் பங்கேற்பாளர்களாக கலந்துக் கொள்வார்கள்.
கடந்த 26 ஜுன் முன்பு– மாநாடு விவாதக் குழுவில், பாலின கொள்கைகளில் வல்லவர்களான மாண்புமிகு சொங் எங் மற்றும் மரியா சீன் இருவரும் தங்களின் கருத்துக்களையும் பரிந்துறைகளையும் பகீர்ந்துக் கொண்டனர்.
மலேசியா பல சவால்களை எதிர்க்கொண்ட போதும் மக்கள், தொகையில் பாதிக்கும் மேற்பட்டோரின் திறன் மற்றும் திறமைகளை புறக்கணிக்க முடியாது. பெண்களின் கூடுதல் திறன் மற்றும் ஆற்றல்களை முடிவெடுக்கும் பன்முகத்தன்மை , மேம்படுத்தவும் பல முறை வலியுருத்தியதை நிருபிக்கப்பட்டுள்ளது.
ஆரோக்கியமான ஜனநாயக பிரதிநிதித்துவம் என்பது பொறுப்பு உருவாக்குதல் , திறன்மிக்க மற்றும் சீரான தலைமைத்துவம் மற்றும் அரசாங்கம் அமைத்தல். நாளைய தலைமுறையினர்க்கு வலுமையான ,ஆரோக்கியமான ஒரு ஜனநாயகத்தை உருவாக்க முடியும்.