பசுமை விருதளிப்பு விழா 2013

Admin

பினாங்கு பசுமை கழக ஏற்பாட்டில் பசுமை விருதளிப்பு விழா கடந்த நவம்பர் மாதம் 12-ஆம் திகதி நடைபெற்றது. இந்நிகழ்வு கொம்தார் அரங்கில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வில் பசுமை பள்ளிகள் திட்டம், பசுமை வீடியோ போட்டி,

பசுமை ஊடகவியல், பசுமை புத்தாக்க ஊக்கத் திட்டம் என நான்கு போட்டிகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. பினாங்கு நகராண்மைக் கழகம் மற்றும் செபெராங் பிறை நகராண்மைக் கழகம் அறிக்கையின் படி கடந்த ஆண்டைக் காட்டிலும் 67% அதிகமானப் பள்ளிகள் ‘பசுமை பள்ளிகள் திட்டம்’ போட்டியில் கலந்து கொண்டனர். இப்போட்டியில் துன் சஹாபுடின் அறிவியல் இடைநிலைப்பள்ளி முதல்நிலை வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

மேலும் பசுமை புத்தாக்க ஊக்கத் திட்டத்தில் 12 குழுக்களும் 20 தனிநபர்களும் கலந்து கொண்டனர். இப்போட்டியின் மூலம் கார்பன் கால்தடத்தைக் குறைப்பதற்கு வழிவகுப்பதோடு சுற்றுச்சூழலை நேசிக்கவும் முடியும். இப்போட்டியின் வெற்றியாளர்களாக ஹொ லிப் வா மற்றும் தியோங் ஹுங் சீக் ஆகியோர் ரிம 5000-ஐ பெற்றுக்கொண்டர்.

மூன்றாவது ஆண்டாக நடத்தப்படும் பசுமை ஊடகவியல் பிரிவுக்கானப் போட்டியில் 20 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். பொது மக்கள்  சுற்றுச்சூழலைப் பற்றியக் கூடுதலான விழிப்புணர்வைப் பெறுவதற்கும் நிருபர்கள் சுற்றுச்சூழல் பற்றிய அதிகமாக செய்திகளை எழுதுவதற்கு ஊக்குவிக்கவும் இப்போட்டி இன்றியமையாததாக அமைகிறது. இப்போட்டி தேசிய மொழி, ஆங்கிலம், தமிழ் மொழி மற்றும் சீன மொழியில் நடைபெற்றன. இப்போட்டியில் வெற்றிப்பெற்ற முதல் நிலை வெற்றியாளர்களுக்கு ரிம 2000 வழங்கப்பட்டன.

பசுமை ஊடகவியல் தேசிய மொழி பிரிவில் வெற்றிப்பெற்ற மோ. கோகினா ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் அஃபீஃப் பஹார்டின் அவர்களிடமிருந்து விருதைப் பெற்றுக்கொண்டார்.
பசுமை ஊடகவியல் தேசிய மொழி பிரிவில் வெற்றிப்பெற்ற மோ. கோகினா ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் அஃபீஃப் பஹார்டின் அவர்களிடமிருந்து விருதைப் பெற்றுக்கொண்டார்.

“Green Penang, Count Me In” என்ற கருப்பொருளில் பசுமை வீடியோ போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் வெற்றிப்பெற்ற முதல்நிலை வெற்றியாளர் ஜெக் ங் வேய் கியாட் ரிம5000 தட்டிச் சென்றார். இந்நிகழ்வை அதிகாரப்பூர்வமாக சமூகநலம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய பீ புன் போ அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பசுமை கண்காட்சியின் தலைவரும் தஞ்சோங் பூங்கா சட்டமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய தே யீ சியாவ், பினாங்கு பசுமை கழகத்தின் தலைவர் திங் சியூ சுயின், ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் அஃபீஃப் பஹார்டின் ஆகியோர் முக்கிய பிரமுகர்களாகக் கலந்து கொண்டனர்.