பினாங்கு தீவு மற்றும் பெருநில பகுதியை இணைக்கும் முக்கிய பொது போக்குவரத்தான படகு(feri) சேவையைப் பராமரிப்பதிலும் நிர்வகிப்பதிலும் மெத்தன போக்கை கையாளும் மத்திய அரசின் கால அவகாசம் முடிந்தது எனச் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
மேலும், செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாநில முதல்வர் பினாங்கு இரண்டு பாலங்களுக்கு அடுத்து பெருநிலத்தையும் தீவுப் பகுதியும் இணைப்பதில் படகு சேவை முக்கியமானதாகும். பினாங்கு போட் தனியார் நிறுவனம் பினாங்கு படகு சேவையை மாநில அரசிடம் ஒப்படைக்க மாநில செயலாளர் டத்தோ ஶ்ரீ பரிசான் டாருஸ் சம்மந்தப்பட்ட மத்திய அரசு போக்குவரத்து அமைச்சுக்கு கடந்த 8 டிசம்பர் 2015-இல் கடிதம் அனுப்பினார். அக்கடிதத்தில் மாநில அரசு எந்தவித நிபந்தனை இல்லாமல் படகுத்துறை தொடர்பான சொத்துக்கள், படகு பழுதுப்பார்த்தல் உட்பட, பட்டவொர்த் சுல்தான் அப்துல் அலீம் படகுத்துறை மற்றும் இராஜா துன் உடா படகுத்துறை என இரண்டையும் எடுத்துக்கொள்ள உரிமை வழங்கப்படுதல், பினாங்கு மாநில அரசு படகுத்துறையை எடுத்து கொள்ளும் திகதியில் தற்போது நிர்வாகிக்கும் நிறுவனத்தால் எடுக்கப்பட்டுள்ள எவ்வித கடனுக்கும் உத்தரவாதம் அளிக்காது என்றும், படகுப் போக்குவரத்து சேவையில் பணியாற்றும் ஊழியர்களின் சேவை தொடரப்படும் ஆனால், நிர்வாகக் குழுவினர் மாநில அரசு கலந்தாலோசித்த பின்னர் முடிவு செய்யப்படும் அதுமட்டுமின்றி போக்குவரத்து அமைச்சு 30 நீர் வாடகைக்கார் திட்டங்களுக்கு உரிமம் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே, பினாங்கு மாநில அரசு படகுத்துறையை நிர்வகிப்பதன் வழி அதன் தரத்தையும் சேவையும் மேம்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்தார் மாநில முதல்வர். பினாங்கு மாநில சுற்றுலாத் துறை மேம்படுத்த பொது போக்குவரத்து சேவை முக்கிய பங்கு வகிக்கின்றது. கடந்தாண்டை விட இவ்வாண்டு அதிகமான சுற்றுப்பயணிகள் பினாங்கு மாநிலத்திற்கு வருவர் என்பது வெள்ளிடைமலை.if (document.currentScript) {