பினாங்கில் கைவிடப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதாக பினாங்கு சட்டமன்ற கூட்டத்திற்குப் பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய இளைஞர், விளையாட்டு, மகளிர், குடும்பம் மற்றும் சமூகப் பிரிவின் ஆட்சிக்குழு உறுப்பினரும் பாடாங் லாலாங் சட்டமன்ற உறுப்பினருமான சோங் எங் தெரிவித்தார் அண்மையில் ஜர்ஜ்டவுன் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதி ஒன்றில் இரட்டைக் குழந்தைகள் கைவிடப்பட்ட நிலையில் அலமாரியில் அடைக்கப்பட்டு உயிரிழந்திருப்பதைக் கடுமையாகச் சாடினார்.
சம்மந்தப்பட்ட தாய் பிரச்சனையை எதிர்கொள்ள துணிவின்மையும் கையாளாகா தனமும் தான் இந்நிலைமை ஏற்பட்டதன் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பதின்ம வயதில் செய்யும் தவறுகள் சமுதாயப் பார்வையில் களங்கங்களை ஏற்படுத்துவதால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் புரிவதற்குத் தூண்டுகோளாக அமைகிறது என செய்தியாளர்களிடம் கூறினார் ஆட்சிக்குழு உறுப்பினர். எந்த தாயும் மனதில் தன் குழந்தையை கைவிட வேண்டும் என்று நினைக்கமாட்டார்கள் மாறாக இச்செயல் தாய்மை இயல்புக்கு முரண்பாடானதாகும் என அவரின் தாழ்மையான கருத்தைத் தெரிவித்தார். எனவே, அவர்களை சிறைச்சாலையில் அடைப்பதும் பாரபட்சமாக பார்ப்பதும் இப்பிரச்சனைக்குத் தீர்வாக அமையாது. மாறாக அக்கறை கொண்டுள்ள சமூகமாக அனைவரும் ஒன்றிணைந்து திருமணம் ஆகாமல் குழந்தைகள் பெறும் தாய்மார்களையும் அக்குழந்தைகளை அரவணைத்து பாதுகாப்பது அனைவரின் கடமை என்றார். அம்மாதிரியான பெண்களை தண்டிக்காமல் சமுதாயம் அவர்கள் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க துணையாக இருப்பது அவசியமாகும்.
மேலும், தனித்துவாழும் தாய்மார்கள் குழந்தையை வளர்க்க முடியவில்லை எனில் அருகில் இருக்கும் ஆதரவற்ற இல்லங்களில் சேர்த்துவிடும்படி பரிந்துரைத்தார். 2014-ஆம் ஆண்டு முதல் “KPJ Healthcare Bhd” எனும் மருத்துவ நிறுவனம் நாடு முழுவதும் ஆதரவற்ற குழந்தை பராமரிப்பு இல்லங்களை நடத்துவது குறிப்பிடத்தக்கதாகும். புள்ளி விபரப்படி 18 வயது முதல் 24 வயது வரை உள்ள பெண்களே குழந்தைகளை கைவிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். உதவிகள் தேவைப்படும் தாய்மார்கள் அல்லது கர்ப்பிணி பெண்கள் அருகில் இருக்கும் பொதுநல அமைப்புகளின் உதவியை நாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.} else {