பினாங்கில் சிறப்பு நிதி மண்டலத்தை உருவாக்க விரிவான ஆய்வு அவசியம் – முதலமைச்சர்

Admin
KETUA Menteri

ஜார்ச்டவுன் – பினாங்கு ஒற்றுமை அரசாங்கம் ஒரு சிறப்பு நிதி மண்டலத்தை உருவாக்க முடிவு செய்வதற்கு முன்னதாக, ஒரு விரிவான ஆய்வு தேவைப்படுகிறது.

ஜொகூரில் உள்ள ஃபாரஸ்ட் சிட்டியைப் (Forest City) போன்ற ஒரு சிறப்பு நிதி மண்டலத்தை உருவாக்குமாறு ஆயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் ஹெங் சூன் சியாங் பரிந்துரைத்ததை அவரது நிர்வாகம் வரவேற்பதாக மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறினார்.

“சிறப்பு நிதி மண்டலமானது ஒரு நகரம் அல்லது பிராந்தியத்தின் முதலீட்டுத் தொழில், வளர்ச்சி மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்க மற்றும் தூண்டுவதற்கான முயற்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஏனெனில், மாநில மற்றும் மத்திய அரசுகளின் உதவி மற்றும் முன்முயற்சிகளுடன் சிறப்பு நிதி மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேலாண்மை, கல்வி, சுகாதாரம், வணிகம் போன்ற துறைகளின் செலவுகள் மாநில மற்றும் மத்திய அரசாங்கத்தின் முன்முயற்சி மற்றும் நிதியுதவியுடன் மிகவும் குறைவான விலையில் காணப்படும்.

“இருப்பினும், பினாங்கில் சிறப்பு நிதி மண்டலத்தை நிறுவுவதற்கான முடிவு எடுப்பதற்கு முன்னதாக, மாநில அரசுக்கு இன்னும் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்படும்,” என்று பினாங்கு மாநில சட்டமன்றத்தின் தொகுப்புரையில் முதலமைச்சர் இவ்வாறு கூறினார்.

பினாங்கில் சிறப்பு மண்டலம் உருவாக்கப்பட்டால், பல்வேறு வரிச் சலுகைகள் போன்ற மத்திய அரசின் ஆதரவு மிகவும் முக்கியமானது என்றும் நிதி, பொருளாதார மேம்பாடு & நிலம் மற்றும் தொலைத்தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ் கூறினார்.

இது தொடர்பான வளர்ச்சியில், பினாங்கில் புதிய முதலீட்டாளர்களுக்கான சிறப்புத் திட்டமாக ‘Hand Holding Programme’ திட்டத்தை InvestPenang மூலம் தனது நிர்வாகம் செயல்படுத்தி வருவதாகக் கூறினார். இத்திட்டத்தின் மூலம் புதியதாக முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு உரிமங்கள், புதிய தொழிற்சாலை கட்டிடம் கட்டுவதற்கு அல்லது வாடகைக்கு வழங்கவும் மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளை தொடங்கவும் உதவி மற்றும் ஆதரவு வழங்கப்படும்.

“சிங்கப்பூர், வியட்நாம், தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது பினாங்கில் வணிகம் செய்வதை எளிதாக்குவதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்,” என்று பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினரும் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் அ.குமரேசன் எழுப்பிய விவகாரத்திற்கு இவ்வாறு பதிலளித்தார்.

“பினாங்கு மாநில நீர் பிரச்சனையைக் கையாளும் பொருட்டு பினாங்கு மாநிலச் செயலாளர் மற்றும் பேராக் மாநிலச் செயலாளர் இடையிலான கலந்துரையாடல் மூலம் பேராக் மாநிலத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை வாங்குவதற்கான கொள்கை ஒப்புதல் மற்றும் ஒப்பந்த உடன்படுக்கையை உருவாக்குதல் ஆகியவை இந்த விவாதத்தின் முக்கிய நோக்கமாக அமைந்தது.

“தொடக்கமாக, சுத்திகரிக்கப்பட்ட நீரை பினாங்கு மாநிலத்திற்கு விற்க பேராக் மாநில அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, சுத்திகரிக்கப்பட்ட நீரை வாங்குவதற்கானச் செலவு குறித்து விரிவாக விவாதிக்க பேராக் மாநிலத்துடன் அடுத்த கட்ட விவாதம் நடத்தப்பட வேண்டும், ஏனெனில் இந்த விஷயம் தொழில்நுட்ப ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்,” என்று மச்சாங் புபு சட்டமன்ற உறுப்பினர், செபராங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சுங்கை டுவா சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் தமது தொகுப்புரையில் இவ்வாறு பதிலளித்தார்.

இருப்பினும், இந்தத் திட்டத்தை விரைவில் செயல்படுத்துவதை உறுதி செய்வதோடு, மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

பினாங்கு மற்றும் பேராக் மாநிலத்தின் வடக்குப் பகுதி உட்பட, 2050 ஆம் ஆண்டு அடையும் வரை, நீண்ட கால தீர்வாக
இத்திட்டம் அமையக்கூடும்.

பினாங்கு நீர் விநியோக வாரியம் (PBAPP) மூலம் மாநில அரசு பினாங்கு மாநிலத்திற்கு கடல் நீரை (உப்பு நீக்குதல்) பயன்படுத்துதல் மற்றும் கழிவு நீரை உள்நாட்டு பயன்பாட்டை விடுத்து மறுசுழற்சி செய்தல் உள்ளிட்ட புதிய நீர் ஆதாரங்களைக் காண தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது என மேலும் விளக்கமளத்தார்.