பினாங்கில் தைப்பூசக் கொண்டாட்டம் களைகட்டியது– முதலமைச்சர்

Admin
img 20250210 wa0200

 

ஜார்ச்டவுன் – பினாங்கு அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்தின் 239-ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

சட்டிப்பூசம் என்று அழைக்கப்படும் முதல்நாள் கொண்டாட்டத்தில் இன்று பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இந்து அறப்பணி வாரிய ஆணையர்கள், ஆலய நிர்வாகக் குழுவினருடன் இணைந்து தண்ணீர் பந்தல்களுக்கு வருகை மேற்கொண்டு இந்தியர்களுக்கு தைப்பூச வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

பினாங்கு மாநில தைப்பூசக் கொண்டாட்டத்திற்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் வருகையளிப்பது இத்திருவிழாவின் சிறப்பம்சம் என முதலமைச்சர் புகழாரம் சூட்டினார்.

அரசு நிறுவனங்கள் போக்குவரத்து சீராக இயங்குவதை உறுதி செய்வதோடு பொது மக்களின் பாதுகாப்பையும் சிறந்த முறையில் கண்காணிப்பதற்குத் தமது பாராட்டினைத் தெரிவித்தார்.

மேலும், ஆலய நிர்வாகத்தினர் தைப்பூசக் கொண்டாட்டத்தை சிறந்த முறையில் ஏற்பாடுச் செய்ததற்கும் பாராட்டினார்.

மேலும், பினாங்கு மாநிலம் பல்லின மக்களின் பன்மூக கலாச்சாரத்துடன் ஒன்றிணைந்து கொண்டாட்டங்களை அமல்படுத்துவதில் பிரசித்தி பெற்று வருகின்றது என சாவ் மேலும் சூளுரைத்தார்.

மூன்று நாட்களுக்கு அனுசரிக்கப்படும் தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு 1.5 மில்லியன் பக்தர்கள் மற்றும் சுற்றுப்பயணிகள் திரளுவர் என எதிர்ப்பார்க்கப்படுறது.

இதனிடையே, பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர் ஆர்.எஸ்.என் இராயர், நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளையும் காவல்துறையினரின் வழிகாட்டுதலையும் பின்பற்றுமாறு பொதுமக்களை வலியுறுத்தினார்.

இதன்மூலம், பாதுகாப்பாகவும் சுமூகமாகவும் தைப்பூச திருவிழாவை கொண்டாட முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

img 20250210 wa0234

 

இந்த ஆண்டு மக்களின் தாகம் மற்றும் பசியைப் போக்கும் வண்ணம் அதிகமான தண்ணீர் பந்தல்கள் நிறுவப்பட்டுள்ளன.

இங்கு அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தல்களுக்கு மாநில முதலமைச்சர் சாவ் கொன் இயோவ் வருகையளித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

img 20250210 wa0213