பினாங்கில் இன்னும் பத்தாண்டுகளுக்கு நீர்ப் பற்றாக்குறை ஏற்படாது என ஜென் தங்கும்விடுதியில் நடைபெற்ற பினாங்கு நீர் விநியோக வாரியத்தின் ஆண்டு கூட்டத்தில் அறிவித்தார் அதன் தலைமை அதிகாரியும் பினாங்கு மாநில முதலமைச்சருமான மேதகு லிம் குவான் எங் அவர்கள். கடந்த 2014-ஆம் ஆண்டு பினாங்கு நீர் விநியோக வாரியம் தமது அளப்பரியா சேவைகளின் மூலம் ரிம261.02 லட்சம் இலாபத்தை சம்பாரித்துள்ளது பாராட்டக்குறியதாகும். இது கடந்தாண்டை காட்டிலும் 6.62% கூடுதலாகும். அதோடு, கடந்த 2013-ஆம் ஆண்டு சிறந்த நீர் விநியோகம் மற்றும் நீர்,சக்தி,பச்சை தொழில்நுட்பம் அமைச்சின்(KeTTHA) ‘சிறந்த ஆற்றல் திறன்’ என பினாங்கு நீர் விநியோக வாரியம் விருதுகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாநில முதல்வர் கடந்த ஏப்ரல் மாதம் அமலுக்கு வந்த நீர் கட்டண உயர்வு பினாங்கு மாநிலம் நீர் பங்கீட்டு முறையை தவிர்ப்பதற்கு என செய்தியாளர்களிடம் கூறினார். தேசிய அளவினை காட்டிலும் பினாங்கு மாநிலம் நீர் பயன்பாட்டில் முதலிடம் வகிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், பினாங்கு நீர் விநியோக வாரியத்தின் சிறந்த சேவைகளின் மூலம் சிலாங்கூர், பேராக் மற்ற மாநிலங்களை போன்று நீர் பங்கீட்டு முறை பினாங்கில் ஏற்படவில்லை என பினாங்கு நீர் விநியோக வாரியத்தை பாராட்டினார் மாநில முதல்வர். கடந்த 12 ஆண்டுகளாக பினாங்கு நீர் விநியோக வாரியம் சிறந்த சேவை வழங்கியுள்ளதைப் பாராட்டினார்.
பினாங்கு மாநிலத்தில் நீர் பயனீட்டாளர்களின் எண்ணிக்கை 2.4% அதிகரித்துள்ளது. நீரின் தேவைகள் அதிகரிக்கும் பட்சத்தில் பொதுமக்களை நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டு கொண்டார் பினாங்கு நீர் விநியோக வாரியத்தின் தலைமை அதிகாரி ஜஸ்மின் மைடினா. அதோடு, கடந்தாண்டு பினாங்கு நீர் விநியோக வாரிய பங்குதாரர்களுக்கு 7.5% ஈவுத்தொகை(Dividen) வழங்கியுள்ளதைச் சுட்டிக் காட்டினார் அதன் வாரிய தலைவர்.} else {