பினாங்கில் முதல் மின்னியல் நூல்நிலையம்

மின்னியல் நூல்நிலயம்
மின்னியல் நூல்நிலயம்

பினாங்கு மாநில முதல் மின்னியல் நூல்நிலையம் மாநில அரசின் முயற்சியில் கீய்சய்ட் தொழில்நுட்ப நிறுவனம், இ&ஒ நிறுவனம் மற்றும் டைம் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டு வருகின்ற அக்டோபர் மாதம் திறப்பு விழா காணும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
3000-க்கும் மேற்பட்ட மின்-புத்தகங்கள், சஞ்சிகைகள், பத்திரிகை குறிப்புகள் இடம்பெறும் இப்புதிய மின்னியல் நூல்நிலையத்தில் இளைய தலைமுறையினர் எதிர்கால முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.. பினாங்கு மாநிலத்தில் மட்டுமின்றி மலேசியாவிலே முதல் முறையாக மின்னியல் நூல்நிலையம் அமைக்கப்பட்டு சரித்திரம் படைக்கிறது என்றார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
தாமான் பிரி ஸ்கூல் அருகில் இருக்கும் மிக பழமையான புஸ்பானிதா கட்டிடத்தை மின்னியல் நூல்நிலையமாக மாற்றியமைக்க இப்புதிய திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது.. இன்று வரை 85% மேம்பாட்டுத் திட்டம் மமுடிவுற்றது என நூல் நிலைய தளத்தை பார்வையிட்ட முதல்வர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இன்றைய காலக்கட்ட தொழிற்துறை மின்சாரம் , உற்பத்தி திறன், இணையம் மற்றும் கணினி சார்ந்த இயந்திரமயமாக்கலின் பிரதிபலிப்பாக அமைகிறது. எனவே பினாங்கு மாநிலம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மாற்றத்தின் பிரதிபலிப்பாக மின்னியல் நூல்நிலையம் திகழ்வதாகத் தெரிவித்தார். இதன்வழி, பினாங்கு மாநிலத்தை அறிவார்ந்த வளர்ச்சி அடைந்த மாநிலமாக பிரகடனப்படுத்த முடியும் என்பது வெள்ளிடைமலை..சுமார் ரிம 2.5 கோடி செலவில் இப்புதிய கட்டிடம் கட்டப்படவிருப்பதாக மேலும் விவரித்தார் மாநில முதல்வர். தொழில்நுட்ப வளர்ச்சியின் ஆதிக்கத்தில் கட்டப்படும் இந்நூல்நிலையம் இளைய தலைமுறையினரிடையே கற்கும் ஆற்றலை மேலோங்க ஊந்து கல்லாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.