புக்கிட் தம்புன் – பினாங்கு மாநில அரசாங்கம் அதன் மையப்படுத்தப்பட்ட அந்நிய தொழிலாளர் தங்குமிட முன்முயற்சி திட்டத்தை, நிலையான வளர்ச்சி மற்றும் அனைத்துலக தொழிலாளர் தரநிலைக்கான இணக்கத்துடன் செயல்படுத்துகிறது.
அந்நிய தொழிலாளர்களுக்கு உயர்தர, நவீன மற்றும் சிறந்த வாழ்க்கை வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு
அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாநில அரசு இத்திட்டம் உள்ளூர் குடியிருப்புப் பகுதிகளில் அந்நிய தொழிலாளர்களால் எழும் சமூக பிரச்சனைகளைத் தவிர்க்க சிறந்த தீர்வாக அமையும் பொருட்டு அறிமுகப்படுத்தியுள்ளது.
மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் இந்த முன்முயற்சியைப் பாராட்டியதோடு, இது சட்டம் 446 மற்றும் சமூக சவால்களைச் சமாளிக்க இணங்குவதாகக் கூறினார்.
“இந்த மையப்படுத்தப்பட்ட தொழிலாளர் தங்குமிடம் என்பது கட்டிடங்கள் என்பதை விட அது பினாங்கின் தொழில்துறையின் எதிர்காலத்தின் முக்கிய முதலீடாக கருதப்படுகிறது.
“இந்த முயற்சியானது இம்மாநிலத்தின் நீண்ட கால தொழில்துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சியை ஆதரிக்கிறது.
நவீன, உயர்தர வாழ்க்கை வசதிகளை வழங்கவும், பினாங்கின் நீண்ட கால தொழில்துறை மற்றும் நகர்ப்புற பரிணாமத்தை முன்னெடுத்துச் செல்லவும் வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.
“உள்ளூர் குடியிருப்புப் பகுதியை விடுத்து தூரத்தில் கட்டப்படும் இந்தத் தொழிலாளர் தங்குமிடம் வசதியினால் அவர்களின் பாதுகாப்பு மற்றும் உள்ளூர் சமூகங்களின் நல்வாழ்வை மேம்படுத்துகிறோம்.
“இது சொத்து மதிப்புன் வீழ்ச்சி, பதிவு செய்யப்படாத வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் தொடர்புடைய சமூக மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் போன்ற சவால்களையும் எதிர்கொள்கிறது,” என்று Penang Science Park South எனும் இடத்தில் நடந்த அடிக்கல் நாட்டு விழாவில் சாவ் இவ்வாறு கூறினார்
கடந்த 2023 நவம்பர்,10 அன்று, Penang Science Park South- இல், பிளாட் 1017 இல் ரிம300 மில்லியன் மதிப்பிலான தங்குமிட வளாகத்தை உருவாக்குவதற்கு, உர்பன் பினாக்கிள் நிறுவனத்துடன் பினாங்கு மேம்பாட்டுக் கழகம் (PDC) குத்தகை ஒப்பந்தம் வாயிலாக இத்திட்டத்தை அமல்படுத்துகிறது.
இத்திட்டம் கட்டம் கட்டமாக மேம்படுத்தப்படும். முதல் கட்டம் இரண்டு ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இரண்டு 20-அடுக்கு தங்கும்விடுதி தொகுதிகள், ஒவ்வொன்றும் 1,100 சதுர அடியில் 836 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 8,000 தொழிலாளர்கள் தங்கும் விடுதிகள் ஆகியவை உள்ளடங்கும்.
இது தங்குமிடங்கள், பல்பொருள் அங்காடிகள், உணவு விடுதிகள், கிளினிக், ஜிம், பல்நோக்கு அரங்குகள், விளையாட்டு மையங்கள், திரையரங்குகள் மற்றும் பொழுதுபோக்குப் பகுதிகள் போன்ற வசதிகளுடன் முழுமையான வாழ்க்கைச் சூழலை வழங்கும்.
இந்த மையப்படுத்தப்பட்ட தங்குமிடங்கள் அமலாக்க முயற்சிகளை ஒழுங்குபடுத்துவதோடு, தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை அதிகாரிகளுக்கு எளிதாக்கும் என்று சாவ் எடுத்துரைத்தார்.
“இந்த முன்முயற்சி திட்டமானது சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை (ESG) இலக்குகள் மற்றும் நிலையான வளர்ச்சி நோக்கங்களுடன் ஒத்துப்போகிறது. இது தொழிலாளர் நெறிமுறை நடைமுறைகள் மற்றும் பொறுப்பான நகர்ப்புற திட்டமிடல் ஆகியவற்றிற்கான எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
இருப்பினும், பினாங்கு, கடந்த ஆண்டு முதலீடுகளில் ரிம32 பில்லியனைப் பெற்று, ஒரு பெரிய தொழில்துறை நிறுவனமாகத் திகழ்கிறது.
தொழில்துறை வளர்ச்சியை ஆதரிப்பதில் பி.டி.சி மற்றும் பிற நிறுவனங்களின் பங்கை சாவ் பாராட்டினார்.
பி.டி.சி தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ அஜிஸ் பாக்கர், இந்த ஆண்டு பத்து காவான் தொழில் பூங்கா (BKIP) 3 மற்றும் பத்து காவானில் மேலும் இரண்டு தங்குமிடத் திட்டங்கள் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
ஊராட்சி, நகர் & புறநகர் திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் எங் மோய் லாய், வாணிகம், தொழில்முனைவோர் மற்றும் புறநகர் மேம்பாடு ஆட்சிக்குழு தலைவர் டத்தோ மற்றும் புக்கிட் தம்புன் சட்டமன்ற உறுப்பினர் கோ சூன் ஐக் ஆகியோர் கலந்து கொண்டனர்.