அண்மையில் பினாங்கு மாநில சட்டமன்ற கூட்டத்தின் போது மாநிலத்தின் பல சட்டமன்ற உறுப்பினர்கள் பினாங்கில் அந்நிய தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட பகுதியில் வீடு கட்டும் திட்டத்தை எதிர்த்து கேள்வி எழுப்பினர். சிங்கப்பூர் நாட்டில் மட்டுமின்றி ஜோகூர் மாநிலத்திலும் பல தொழில்துறை பகுதியில் அந்நிய தொழிலாளர்களுக்கு என பிரத்தியேகமாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிதரப்பட்டுள்ளன. எனவே, இத்திட்டத்தை பினாங்கு மாநிலம் முதல் முறையாக அமல்படுத்தவில்லை என தெளிவுப்படுத்தினார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ.
பினாங்கு வாழ் மக்கள் அமைதியான பாதுகாப்பான வாழ்க்கை வாழவும் இந்த மாநிலத்தில் வேலை பார்க்கும் வெளிநாட்டவர்களின் மனித உரிமைகள் பராமரிக்கும் பொருட்டு இத்திட்டத்தை அமல்படுத்த மாநில அரசு இலக்கு கொண்டுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார். ஜோகூர் மாநிலத்தில் மட்டும் சுமார் ஐந்து அந்நிய தொழிலாளர் தங்கும்விடுதி இருக்கின்றன.
இம்முறையை கையாள்வதன் வழி பினாங்கில் அந்நிய நாட்டவர்களின் நடமாட்டத்தை நாம் கட்டுப்படுத்துவதோடு பினாங்கு மாநிலத்தின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும். அந்நிய நாட்டவர்கள் தங்கும்விடுதி அமைக்க மலேசிய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்புடன் Persekutuan Pengilang Malaysia (FMM) பேச்சு வார்த்தை நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு தொழிற்சாலையும் அவர்தம் நிலத்தில் அந்நிய தொழிலாளர் தங்கும்விடுதி கட்டவிரும்புவதை மாநில அரசின் வழிகாட்டலும் அடிப்படைகளையும் பின்பற்றுவதை மாநில அரசு வரவேற்கின்றது.
பினாங்கு மாநில அரசு அந்நிய தொழிலாளர் தங்கும்விடுதியை பத்து மாவுங், புக்கிட் தெங்கா மற்றும் புக்கிட் தம்புன் இடங்களில் கட்ட திட்டமிட்டுள்ளது. எனினும், பத்து மாவுங் பகுதியில் கட்டப்படவிருக்கும் திட்டம் இன்னும் மாநில அரசால் அங்கீகரிக்கப்படவில்லை என செய்தியாளர் சந்திப்பில் விரிவுப்படுத்தினார் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.ஜெக்டிப்