பினாங்கு வீடமைப்புத் திட்டமிடல் குழு ஏற்பாட்டில் “பினாங்கு அனைத்துலக சொத்துடைமை மாநாடு” இரண்டாவது முறையாக இனிதே நடைபெற்றது. சில ஆண்டுகளாக தொடர்ந்து இம்மாநிலத்தின் சொத்துடைமை விலை அதிகரித்துக் கொண்டே செல்வதால் பொது மக்கள் வீடு மற்றும் சொத்துகள் வாங்க இயவில்லை. எனவே, பினாங்கு வாழ் மக்கள் சொந்த வீடு பெறுவதை உறுதிச்செய்ய மாநில அரசு மலிவு விலை வீடமைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது அனைவரும் அறிந்ததே. இந்தச் சொத்துடைமை மாநாட்டில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்கள் மாநில அரசு நிர்மாணிக்கும் மலிவு விலை வீடமைப்புத் திட்டம் பற்றிய கூடுதல் தகவல்கள் பெறுவர். அதோடு தனியார் மேம்பாட்டாளர்கள் இத்திட்டத்தில் இடம்பெறும் பொருட்டு மாநில அரசு ஊக்கத்தொகை வழங்குகிறது என்றால் மிகையாகாது.
13-வது பொதுத் தேர்தலின் போது பினாங்கில் ஆயர் ஈத்தாம் மற்றும் ஆயர் பூத்தே தொகுதியில் 9,999 மலிவு விலை வீடுகள் கட்டுவதாகக் கூறிய பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் இரசாக் வாக்குறுதி இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. கூட்டரசு அரசு கட்டவேண்டிய மலிவு விலை வீடமைப்புத் திட்டத்தை மாநில அரசு தொடர்ந்து நிர்மாணிப்பதைச் சுட்டிக்காட்டினார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். மலேசியாவிலே மூன்றாவதாக கூடுதல் வரிச் செலுத்தும் மாநிலமாக பினாங்கு திகழ்ந்த போதிலும் மத்திய அரசு பொது வீடமைப்புத் திட்டத்திற்குச் செவிச் சாய்க்கவில்லை. கடந்த மாநாட்டில், தனியார் மேம்பாட்டாளர்கள் பல பரிந்துரைகள் மாநில அரசிடம் தெரிவித்தனர். அப்பரிந்துரைகள் கருத்தில் கொள்ளப்பட்டது ஆனால் இன்னும் செயல்முறை படுத்தவில்லை என்றார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு.ஜெக்டிப் சிங் டியோ. 2016-ஆம் ஆண்டு “பினாங்கில் வீடுகள் வழங்கும் ஆண்டு” என வரவேற்புரையில் தெரிவித்தார்.
பினாங்கு மாநில விளம்பர அனுமதி மற்றும் மேம்பாட்டாளர் உரிமம் (Advertising Permit and Developers Licence – APDL) பெறுவதற்கு விண்ணப்பித்த மேம்பாட்டாளர்களுக்குக் கூட்டரசு அரசு உரிமம் வழங்க மறுப்பதால் பல பொது வீடமைப்புத் திட்டங்கள் தொடர முடியாமல் முடங்கிக் கிடப்பதாகக் முதல்வர் கூறினார் . இதனை மத்திய அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.if (document.currentScript) {