பினாங்கு அனைத்துலக விமான நிலைய விரிவாக்கத் திட்டம் 2024 ஆண்டின் மூன்றாம் காலாண்டில் தொடங்கப்படும்.

Admin
tkm0527c 再里尔

ஜார்ச்டவுன் – பினாங்கு அனைத்துலக விமான நிலைய விரிவாக்கத் திட்டம் ரிம1 பில்லியன் செலவில் 2024-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் தொடங்கப்படும்.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது ஓர் ஆண்டுக்கு 6.5 மில்லியன் பயணிகளிடமிருந்து (எம்.பி.பி.ஏ) 12 எம்.பி.பி.ஏ பயணிகளை அதிகரிப்பதே ஆகும் என உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் இலக்கவியல் ஆட்சிக்குழு உறுப்பினர், ஜைரில் கிர் ஜோஹாரி கூறினார்.

“இந்த மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட கட்டிடங்களை அகற்றுதல் மற்றும் மறுசீரமைப்பு, விமான முனையத்தை விரிவுப்படுத்துதல், புதிய கட்டுப்பாட்டு கோபுரம் கட்டுதல், புதிய முனையத்தை நிர்மாணித்தல், ஏற்கனவே உள்ள முனையத்தை மாற்றியமைத்தல் மற்றும் பிற முக்கிய மேம்பாட்டுப் பணிகள் செயல்படுத்துதல் ஆகியவை இந்த மூன்று பிரிவுகளில் அடங்கும்.

“பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் பயணிகள் நிர்வாகத்தை சீர்ச் செய்தல் குறிப்பாக வருகைப் பதிவு கவுண்டர்கள், குடிவரவு கவுண்டர்கள் மற்றும் சுங்க கவுண்டர்கள் ஆகியவை அடங்கும். இத்திட்டம் மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் விளக்கமளித்தார்.

தஞ்சோங் பூங்கா மாநில சட்டமன்ற உறுப்பினரான ஜைரில், இன்று காலை 15-வது மாநில சட்டமன்றத்தின் இரண்டாவது தவணையின் முதல் கூட்டத்தில் புக்கிட் தம்புன் சட்டமன்ற உறுப்பினர் கோ சூன் ஐக்கின் கேள்விக்குப் பதிலளிக்கும் போது இவ்வாறு கூறினார்.

இதனிடையே, போக்குவரத்து நெரிசல் குறித்து கருத்துரைத்தப்போது, கடந்த மார்ச் 2024 இல், மலேசிய ஏர்லைன்ஸ் ஹோல்டிங் பெர்ஹாட் (MAHB) இந்த மேம்பாட்டுத் திட்டம் தொடர்பாக, பினாங்கு மாநகர் கழகம் (எம்.பி.பி.பி) மற்றும் சட்டப்பூர்வ ஏஜென்சிகள் போன்ற தரப்பினர்களுடன் சந்துப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டதாக ஜைரில் கூறினார்.

“இதில், மேம்பாட்டுத் தளப் பகுதியைச் சுற்றியுள்ள போக்குவரத்து பாதிப்பு மதிப்பீட்டை (TIA) உள்ளடக்கிய நிபந்தனைகள் மற்றும் குறுகிய கால தீர்வாகப் போக்குவரத்து விளக்குகள்
ஜாலான் துன் டாக்டர் ஆவாங் வழியாக ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷாவுக்கு செல்லும் மாற்றுவழி பாதையில் பொருத்தப்பட்டுள்ளது.

“தெலுக் கும்பாருக்குச் செல்ல விரும்பும் வாகனங்கள், சுங் ஷான் சீனப்பள்ளி முன்னால் உள்ள உயரமான U-டர்ன் சந்திப்பைப் பயன்படுத்தலாம். எதிர்காலத்தில் ஜாலான் துன் டாக்டர். அவாங் அருகில் U-டர்ன் நிர்மாணிக்கப்படும்.

“கூடுதலாக, நீண்ட கால நடவடிக்கைக்காக, பொதுப் பணித் துறை (ஜே.கே.ஆர்) ஆலோசகர் விரிவான TIA ஆய்வை மேற்கொள்வதற்கும், ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா பிரிவு 13.2 முதல் பிரிவு 15.8 வரையிலான FT006 வழித்தடத்தில் மேம்பாலம் கட்ட முன்மொழிவதற்கும் நிபந்தனைகள் அமைத்துள்ளது.

“மேலும், ஜாலான் துன் டாக்டர் அவாங் முதல் சுங்கை நிபோங் நெடுஞ்சாலையை நோக்கி பாதாள சாலை நிர்மாணிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், மத்திய அரசு
ஜைரில் மாஸ் ரேபிட் டிரான்சிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தை முத்தியாரா வழித்தடத்தில் இலகு ரயில் போக்குவரத்து (எல்.ஆர்.டி) திடசெயல்படுத்தவும் கையகப்படுத்தும் செயல்முறையை செயல்படுத்த நியமிக்கப்பட்டுள்ளது.

“கொம்தாரில் இருந்து பினாங்கு சென்ட்ரல் வரையிலான பிரிவு 2க்கான பொது ஆய்வு 2024 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் மேற்கொள்ளப்படும்.

“சிலிக்கான் தீவு முதல் கொம்தார் வரையிலான சீரமைப்பின் பொது ஆய்வு தற்போதைக்கு மீண்டும் மேற்கொள்ளப்பட வேண்டியதில்லை. ஏனெனில், இது முன்பு தீர்மானிக்கப்பட்ட அதே சீரமைப்பைக் கொண்டுள்ளது.

“கையகப்படுத்தும் செயல்முறை இறுதி செய்யப்பட்டப் பிறகு, கட்டுமானப் பணிகள் 2025 ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்கும். மேலும், 2030 இல் முழுப் பாதையும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.