பினாங்கு இந்து அறப்பணி வாரியம் மேற்கல்வி தொடர இரண்டு மாணவர்களுக்கு உபகார சம்பளக் கடிதம் வழங்கியது

heb

ஜார்ச்டவுன் – பினாங்கு இந்து அறப்பணி வாரியம் (PHEB) தகுதியான இரண்டு மாணவர்களுக்கு ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில அதிகாரப்பூர்வ உபகாரச் சம்பளக் கடிதங்களை வழங்கியது.

இந்த உபகாரச் சம்பளம் வழங்குவதன் மூலம் இந்து அறப்பணி வாரியம் பினாங்கு இந்து சமூகத்தின் முன்னேற்றத்திற்குக் கொண்டுள்ள உறுதிபாட்டைப் பிரதிபலிக்கிறது. மேலும், அறப்பணி வாரியம் உயர்கல்விக்கு ஆதரவளிப்பதற்கும், இளைய தலைமுறையினருக்கு அதிகாரமளிப்பதற்கும் உத்வேகம் கொண்டு செயல்படுகிறது.

ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் ரோஷினி த/பெ பிரபாகரனுக்கு பயோமெடிக்கல் அறிவியலில் 4 ஆண்டுகள் இளங்கலை பட்டம் பெற ரிம98,100 மதிப்பிலான உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டது. அதேவேளையில், கேஷிகா த/பெ ராமன் வணிக மேலாண்மை துறையில் 2 ஆண்டுகள் டிப்ளோமா கல்வி பயில்வதற்கு ரிம21,600 மதிப்புடைய உபகாரச் சம்பளம் பெற்றார்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியம் பினாங்கு இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் கல்வி உபகாரச் சம்பளம் வழங்க அனைத்து பல்கலைக்கழகங்களுடனும் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது.

இந்த முன்முயற்சிகள் இந்தியச் சமூகம் முன்னோக்கிச் செல்வதற்கும், மேலும் அதிகமான பினாங்கு இந்துக்கள் மேற்கல்வியை அணுகுவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. இதன் மூலம், இந்தியச் சமூகத்தின் சிறந்த எதிர்காலத்திற்குச் சாதகமான பங்களிப்பை வழங்க முடியும்.

heb2

இந்த முன்முயற்சி திட்டங்கள் மூலம், பினாங்கு இந்து அறப்பணி வாரியம் இளைஞர்கள் தங்கள் உயர்கல்வியில் சிறந்து விளங்குவதோடு திறன்மிக்க தொழில்துறை வல்லுநர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.