பினாங்கு இந்து அறப்பணி வாரியம் கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கி இந்திய மாணவர்கள் கல்வித் துறையில் சிறந்து விளங்கி எதிர்காலத்தில் சிறந்த தலைவர்களாக உருவெடுக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் ஊக்கத்தொகை வழங்கி வருகிறது என வரவேற்புரையில் தெரிவித்தார் இந்து அறப்பணி வாரியத் துணை தலைவரும் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினருமான திரு தனசேகரன்.
2016-ஆம் ஆண்டுக்கான முதல் தவணையில் 145 மாணவர்கள் ரிம370,264 லட்சம் ஊக்கத்தொகை பெற்றுக்கொண்டனர். மேலும் கடந்த 20/5/2016-ஆம் நாள் கொம்தார் அலுவலகத்தில் நடைபெற்ற இரண்டாம் தவணைக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வில் 152 மாணவர்கள் மற்றும் பிரதிநிதிகள் அகம் மகிழ காசோலை பெற்றுக் கொண்டனர்.
முதல் முறையாக ஊக்கத்தொகைப் பெற்றுக்கொண்ட மாணவி குமுதா, 24 தனது செயல்திறன் பயிற்சியை மேற்கொள்வதற்கு இந்தப் பணம் பயன்படுத்த எண்ணம் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். செகி கல்லூரியில் வியாபாரத்துறையில் முதலாம் ஆண்டு பயிலும் குபினேஸ் குமார் கல்லூரி தவணைக் கட்டணம் ம்ற்ரும் புத்தகங்கள் வாங்குவதற்கு இப்பணம் பயன்படுத்தப்படும் என்றார்.
இந்து அறப்பணி வாரிய உதவியால் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் எதிர்காலத்தில் உயர்ந்த நிலை அடைந்தவர்கள் தொடர்ந்து இவ்வாரியத்தின் பல அறப்பணி திட்டங்களுக்குத் தொல் கொடுக்க வேண்டும் என்றார் சட்டமன்ற உறுப்பினர் திரு தனசேகரன். இந்திய மாணவர்கள் இந்து அறப்பணி வாரியம் வழங்கும் இந்த உதவித்தொகை சிறிய தொகை என்ற போதிலும் இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சி உறுதியாகத் துணைபுரியும் என்றார்.