பினாங்கு எதிர்காலத்தில் பள்ளிகளில் அதிக மேக்கர் லேப்களைக் கொண்டிருக்கும்

Admin
img 20240802 wa0058

பத்து காவான் – கூட்டு முயற்சிகள் மற்றும் அனைத்து தரப்பினரின் தொடர் நடவடிக்கை, பினாங்கினை அதிக வருமானம் ஈட்டும் இலக்கை நோக்கி பங்களிப்பது ஆகியவை கடந்த காலங்களில் மாநிலத்தை பல்வேறு துறைகளில் முன்னணியில் வைத்திருக்கின்றன.

 

இன்று, பினாங்கில் மொத்தம் 129 பள்ளிகளில் 92 ஆரம்பப் பள்ளிகள் மற்றும் 37 இடைநிலைப் பள்ளிகளில் மேக்கர் லேப்கள் (MakerLab) அமைக்கப்பட்டுள்ளன.

 

 மலேசியாவிலேயே பினாங்கு மாநிலம் அதிக எண்ணிக்கையிலான மேக்கர்லேப் பள்ளிகளைக் கொண்டிருக்கிறது.

 

மேக்கர் லேப் என்பது பள்ளிகளில் பல்வேறு கற்றல் கருவிகள், மென்பொருள் மற்றும் வன்பொருள் ஆகியவற்றைக் கொண்ட மேக்கர் ஸ்பேஸ் (maker space) வகுப்பாகும். இது பள்ளி மாணவர்கள் 21 ஆம் நூற்றாண்டிற்குத் தேவையான முக்கியமான திறன்களைக் கற்றுக்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

தொழில்துறையினர், சமூகங்கள் மற்றும் பள்ளிகளுடன் மாநில அரசு கொண்டுள்ள ஒத்துழைப்பிற்கு இந்த மேக்கர் லேப்கள் ஒரு சான்றாகும் என்று முதல்வர் சாவ் கொன் இயோவ் கூறினார்.

 

பினாங்கு அறிவியல் கிளஸ்தர் (PSC) பினாங்கில் உள்ள பள்ளிகள் தொழில்துறை வல்லுனர்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருப்பதை உறுதிசெய்வதில் பொறியியல் மற்றும்  கட்டிடக் கலைஞராக உருவாக்குகின்றது. இளம் தலைமுறையினரிடையே  உலகத்தை  அறிந்துகொள்வதற்கான ஆரம்பப் பாதையாக இது செயல்படுகிறது.

 

மேக்கர் லேப் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு 21 ஆம் நூற்றாண்டின் முக்கியமான தொழில்நுட்ப திறன்களான குறியீட்டு முறை, உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள், 3D வடிவமைப்பு மற்றும் 3D அச்சிடுதல் போன்றவற்றைக் கற்றுக் கொள்ளவும் பயிற்சிக்கவும் உதவுகிறது.

 

மாணவர்கள் தங்கள் படைப்பாற்றல் மற்றும் புதுமைகளைப் பயன்படுத்தி திட்டங்களை உருவாக்கவும், சிக்கல்களைத் தீர்க்கவும், மாநில, தேசிய மற்றும் அனைத்துலக அளவில் போட்டிகளில் பங்கு பெற வழிவகுக்கும்.

 

“ஒரு குழுவாக தங்கள் திட்டங்களை உருவாக்குவதன் மூலம், மாணவர்கள் எதிர்கால வெற்றிக்கு தேவையான முக்கியமான மென்மையான திறன்களான படைப்பாற்றல், ஒத்துழைப்பு, தொடர்பு மற்றும் விமர்சன சிந்தனை போன்றவற்றையும் இதன்வழி பயிற்சி செய்வர்.

 

“இந்த 129 பள்ளிகளில், சில பள்ளிகள் மற்றும் மாணவர்கள் வலுவான தொழில்நுட்ப திறன்களை வளர்த்துக் கொண்டுள்ளனர். மேலும் சவாலான திட்டங்களுக்கு ஆர்வமாக உள்ளனர். இது பினாங்கு அறிவியல் கிளாஸ்தர் அண்மையில்  ‘மேம்பட்ட மேக்கர்லேப்’ திட்டத்தை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது,” என சாவ்  பத்து காவானில் உள்ள விட்ரோக்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் தொடக்க விழாவின் போது தனது உரையில் கூறினார்.

 

PSC தலைமையிலான மேம்பட்ட மேக்கர்லேப் திட்டம், பினாங்கில் நடைபெறவிருக்கும் ஆண்டு இறுதிப் போட்டியில் பங்கேற்கும் புதுமையான மற்றும் ஆக்கப்பூர்வமான திட்டங்களை உருவாக்குவதற்காக 18 இடைநிலைப் பள்ளிகளுக்கு நிதியுதவி செய்ய 10 நிறுவனங்கள் மற்றும் ஒரு பள்ளி முன்னாள் மாணவர் ஒன்றிணைகின்றனர்.

 

PSC தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ உய் பெங் ஈ கூறுகையில், இந்த ஆண்டு இத்திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட 18 பள்ளிகள், தொழில்துறை நிபுணர்கள், அதாவது நிதியுதவி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களின் பொறியாளர்களால் வழிநடத்தப்படும் தொழில்நுட்ப ரீதியாக சவாலான திட்டங்களை கற்க சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

 

“இந்த ஆண்டு நவம்பரில் நடைபெறும் பினாங்கு அனைத்துலக அறிவியல் கண்காட்சியின் போது நடைபெறவிருக்கும் போட்டியில் மாணவர்கள் பங்கேற்பதால், இந்த ஆறு மாதத் திட்டம் மாணவர்களைத் தயார்படுத்தும்,” என்று ஓய் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது கூறினார்.

img 20240802 wa0046

 

ஒரு பள்ளியில் மேக்கர் லேப் அமைப்பதற்கு சராசரியாக ரிம60,000 தேவைப்படுவதாகவும், அது ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பினாங்கில் 2017-ஆம் ஆண்டு  ஒரு பள்ளியில் முதன்முதலில் மேக்கர்லேப் நிறுவப்பட்டது.

 

முன்னதாக மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் டேனியல் கூய் ஜி சென், PSC இன் வாரிய உறுப்பினரும், மாநிலக் கல்வித் துறை இயக்குநர் டத்தோ அப்துல் சைட் ஹுசைன் மற்றும் ViTrox தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டத்தோ சூ ஜென் வேங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

img 20240802 wa0030